Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிரிட்டோரியஸுக்கு காயம்….. அணியில் இடம்பிடித்த மார்கோ ஜான்சன்..!!

டுவைன் பிரிட்டோரியஸ் காயமடைந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில்  மார்கோ ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்., 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன, அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஏனெனில் இந்த 8 அணிகளும் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது.. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உட்பட 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடம் பட்சத்தில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 க்கு செல்லும்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது இடது கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தென்னாப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே மார்கோ ஜான்சன் தென்னாப்பிரிக்காவின் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த டுவைன் பிரிட்டோரியஸுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஜான்சனுக்குப் பதிலாக லிசாட் வில்லியம்ஸ் ரிசர்வ் வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணி :

டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரில்லி ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன்.

காத்திருப்பு வீரர்கள்: பிஜோர்ன் ஃபோர்டுயின், அண்டில் பெஹ்லுக்வாயோ, லிசாட் வில்லியம்ஸ்.

Categories

Tech |