சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் என்ற புதிய மைல்கல் சாதனை வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆட்டத்தின் போது அவர் இந்த சாதனையை வசமாக்கினார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.