ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.
அபுதாபியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதியது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20ஓவருக்கு 5விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 48ரன் எடுத்தார். முஜீப் உர் ரஹ்மான் 3விக்கெட்களை வீழ்த்தினார். 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடி வருகின்றது.