இந்திய அணி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணியுடன் மோதுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…
7ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இன்று தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி எந்தெந்த நாளில் எந்தெந்த அணியை சந்திக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்..
அக்டோபர் 24 : இந்தியா – பாகிஸ்தான் (இரவு 7: 30)
அக்டோபர் 31 : இந்தியா – நியூசிலாந்து (இரவு 7: 30)
நவம்பர் : 3 இந்தியா – ஆப்கானிஸ்தான் (இரவு 7: 30)
நவம்பர் : 5 தகுதி சுற்று அணியுடன் இந்தியா மோதுகிறது (இரவு 7: 30)
நவம்பர் : 8 தகுதி சுற்று அணியுடன் இந்தியா மோதுகிறது (இரவு 7: 30)
மேற்கண்ட போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் 18 ஆம் தேதி இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியையும் எதிர்கொள்கிறது.. நவம்பர் 8ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிகிறது. இதன் முடிவில் முதல் இரண்டு பிரிவில் (குரூப் 1, குரூப் 2) இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
தெரிந்து கொள்ளுங்கள் :
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இடம் பிடித்துள்ள நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன..
முதல் சுற்றில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.. அதில், ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா அணிகளும் இடம் பிடித்துள்ளன.. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.. மோதிய பின் இரண்டு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்..
சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே 8 அணிகள் உள்ளன.. அதில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இடம்பிடித்திருக்கிறது.. அதேபோல குரூப்-2 வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது.. முதல் சுற்றில் இரண்டு பிரிவில் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இந்த குரூப்-1 குரூப்-2 பிரிவில் இடம்பெறும்.. இந்த சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்..
முதல் நாளான இன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதவுள்ளன. இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்கதேச அணி, கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் லைவ் செய்கின்றன…
இந்திய அணியின் வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சஹர், அஸ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி..
உலக கோப்பையை தட்டி தூக்கும் அணிக்கு ரூ.12 கோடியும், 2ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
𝕄𝕒𝕥𝕔𝕙 𝔻𝕒𝕪 🥳
What are your predictions?#T20WorldCup pic.twitter.com/xe2Y9AoP08
— T20 World Cup (@T20WorldCup) October 17, 2021