டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதற்கிடையில் ஆசிய கோப்பை தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி பரிதாபமாக தோற்று வெளியேறியது. இதில் இலங்கை நேற்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.. இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில், துணைக் கேப்டன் கேல் ராகுல், விராட் கோலி ,தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஜடேஜா இடம்பெறவில்லை..
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆர் பந்த் (டபிள்யூ கே), தினேஷ் கார்த்திக் (டபிள்யூ கே), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், ஒய் சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள் :
முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்
Standby players – Mohd. Shami, Shreyas Iyer, Ravi Bishnoi, Deepak Chahar
— BCCI (@BCCI) September 12, 2022