20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.
அபுதாவியில் உள்ள அபுதாபி கிரிக்கெட் ஓவல் 2 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதவுள்ளது. பின்னர் இதே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியோடு ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.
அதே போல துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றது. பின்னர் இதே மைதானத்தில் இரவு 7.30மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா –
இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.