Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வெளியேறிய ஸ்காட்லாந்து…. சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த ஜிம்பாப்வே அணி..!!

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது ஜிம்பாப்வே அணி..

ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிந்தது. இதில் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 54 ரன்களும், கலம் மேக்லியோட் 25 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18. 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சகாப்வா 4 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கிரெய்க் எர்வின் 54 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின் வந்த மாதேவெரே 0, சீன் வில்லியம்ஸ் 7 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும் மிடில் ஆரிடரில் இறங்கிய சிக்கந்தர் ராசா 23 பந்துகளில் அதிரடியாக 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசியில் மில்டன் ஷும்பா 11,  ரியன் பர்ல் 9 ரன்களும் அடித்து அணியை வெற்றிபெற வைத்தனர். ஜிம்பாப்வே அணி இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12 சுற்றுக்கு சென்றுள்ளது. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று சூப்பர் 12க்கு சென்றுள்ளது. அதேபோல குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 

Categories

Tech |