Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஹாட்ரிக் சாதனை….. “6ஆவது வீரராக இணைந்தார் அயர்லாந்தின் லிட்டில்”…. இதோ லிஸ்ட்.!!

டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார்.

8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய  நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதன்பின் ஆடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும் இந்த போட்டியில் அயர்லாந்து அணி வீரர் ஜோசுவா லிட்டில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். போட்டியின் 19 ஆவது ஓவரை வீசிய அவர் கேன் வில்லியம்சன் (61) ஜிம்மி நீசம் (0), சான்ட்னர் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் செய்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளார். இது இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். முன்னதாக தகுதி சுற்றுப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக சுழல் பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

டி20 உலக கோப்பையில் இரண்டாவது முறையாக ஹார்ட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரரானார் ஜோசுவா லிட்டில் ஒட்டுமொத்தமாக டி20 உலக கோப்பையில் அயர்லாந்து வீரர்கள் 2 பேர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் அயர்லாந்தின் கர்டிஸ் கேம்பர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை பதிவு செய்த ஒரே பந்து வீச்சாளர் ஆவார்.

இதுவரையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் 6 பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பெயர்கள் இதோ..

பிரட் லீ (ஆஸ்திரேலியா) – 2007 v பங்களாதேஷ் (முடிவு: வெற்றி)

⦿ ஷகிப் அல் ஹசன் (c ஆடம் கில்கிறிஸ்ட்)
⦿ மஷ்ரஃப் மோர்டசா (b )
⦿ அலோக் கபாலி (எல்பிடபிள்யூ)

கர்டிஸ் கேம்பர் (அயர்லாந்து) – 2021 v நெதர்லாந்து (முடிவு: வெற்றி)

⦿ கொலின் அக்கர்மேன் (c நீல் ராக்)
⦿ ரியான் டென் டோஸ்கேட் (எல்பிடபிள்யூ)
⦿ ஸ்காட் எட்வர்ட்ஸ் (எல்பிடபிள்யூ)
⦿ ரோலோஃப் வான் டெர் மெர்வே (b )

வனிந்து ஹசரங்க (இலங்கை) – 2021 எதிராக தென்னாப்பிரிக்கா (முடிவு: தோல்வி)

⦿ ஐடன் மார்க்ரம் (b )
⦿ டெம்பா பவுமா (c  பதும் நிஷாங்கா )
⦿ டுவைன் பிரிட்டோரியஸ் (c பானுகா ராஜபக்ச)

ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) – 2021 v இங்கிலாந்து (முடிவு: வெற்றி)

⦿ கிறிஸ் வோக்ஸ் (c அன்ரிச் நார்ட்ஜே)
⦿ இயோன் மோர்கன் (c கேசவ் மகாராஜ்)
⦿ கிறிஸ் ஜோர்டான் (c டேவிட் மில்லர்)

கார்த்திக் மெய்யப்பன் (யுஏஇ) – 2022 எதிராக இலங்கை (முடிவு: தோல்வி)

⦿ பானுகா ராஜபக்ச (c காஷிப் தாவுத்)
⦿ சரித் அசலங்கா (c  வ்ரித்யா அரவிந்த்)
⦿ தசுன் ஷனக (b )

 

 

Categories

Tech |