Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 17 பந்துகளில் அதிரடி அரைசதம்…. வார்னர் சாதனையை காலி செய்த ஸ்டோய்னிஸ்..!!

ஆஸ்திரேலியாவுக்காக டி20யில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை மார்கஸ் ஸ்டோனிஸ் முறியடித்துள்ளார்.  யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக ஸ்டோய்னிஸ் இணைந்துள்ளார்.

ஐசிசி டி20 உலக கோப்பை 19வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்க்கஸ் ஸ்டாய்னிஸின் அதிரடி அரைசதத்தால் 16.3 ஓவரில் 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர் உடன் 59* ரன்களுடம், ஆரோன் பிஞ்ச் 31(42) ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது டி20 உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை ஸ்டாய்னிஸ் தகர்த்தார். ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்டர் வெறும் 17 பந்துகளில் அரை சதம் அடித்து தனது சக வீரர் வார்னரை முறியடித்தார்.

மூத்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 2010 ஆம் ஆண்டு சிட்னியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல்முறையாக 18 பந்துகளில் தனது அதிவேக அரைசதத்தை விளாசினார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்டோய்னிஸின் அரைசதம் அடித்த இரண்டாவது அதிவேக அரை சதம் இதுவாகும்.

டி20 உலகக் கோப்பையில் ஸ்டோனிஸ் மற்றும் ஸ்டீபன் மைபர்க் இணைந்து அதிவேக அரைசதத்தை 17 பந்துகளில் அடித்து சாதனை படைத்துள்ளனர்.  புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் 2007 உலகக் கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்தார். டர்பனில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் 12 பந்துகளில் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

ஸ்டீபன் மைபர்க் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருந்தார் தற்போது அந்த வரிசையில் ஸ்டோய்னிசும் இணைந்துள்ளார். கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் அரைசதமடித்து 3ஆவது இடத்தில இருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை அதிவேக அரைசதங்கள் அடித்த டாப் 10 வீரர்கள் :

1. இந்திய வீரர் யுவராஜ் சிங்  – 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக (12 பந்துகள்)

2. ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் – 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக (17 பந்துகள்)

 

3. நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் மைபர்க் – 2014 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக (17 பந்துகள்)

4. ஆஸ்திரேலிய கிளென் மேக்ஸ்வெல் – 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக (18 பந்துகள்)

5. இந்திய வீரர் கே.எல் ராகுல் – 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக (18 பந்துகள்)

6. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் – 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக (18 பந்துகள்)

7. வங்கதேச வீரர் முகமது அஷ்ரபுல் –   2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக (20 பந்துகள்)

8. இந்திய வீரர் யுவராஜ் சிங் – 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக (20 பந்துகள்)

9. இலங்கை வீரர் மகேலா ஜெயவர்த்தனே –  2007 ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக (21 பந்துகள்)

10. ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்புரா – 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக (21 பந்துகள்)

10. தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிகாக் – 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக (21 பந்துகள்)

 

 டி20 உலகக்கோப்பை உட்பட சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் :

12 பந்துகள் – யுவராஜ் சிங் – [ இங்கிலாந்துக்கு எதிராக 2007 ]

17 பந்துகள் – மார்கஸ் ஸ்டோனிஸ் [ இலங்கைக்கு எதிராக 2022 ]

18 பந்துகள் – டேவிட் வார்னர் [ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2010 ]

18 பந்துகள் – க்ளென் மேக்ஸ்வெல் [ பாகிஸ்தான் அணிக்கு எதிராக  2014 ]

18 பந்துகள் – க்ளென் மேக்ஸ்வெல் [ இலங்கை அணிக்கு எதிராக  2016 ]

19 பந்துகள் – டேவிட் வார்னர் [ தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 2009 ]

19 பந்துகள் – கேமரூன் கிரீன் [ இந்திய அணிக்கு எதிராக 2022 ]

Categories

Tech |