டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .நடப்பு உலகக் கோப்பை டி20 போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. குறிப்பாக ‘சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் விளையாடிய 5 போட்டியிலும் அபார வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் வலுவான அணியாக திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் பாபர் அசாம்,முகமது ரிஸ்வான்,சோயிப் மாலிக் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளன. அதேபோல் பந்து வீச்சிலும் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், இமாத் வாசிம் , ஷதப் கான் ஆகியோர் மிரட்டி வருகின்றனர் .இதனால் இன்று நடைபெறும் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பயணத்தை தொடரும் வேட்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நடப்பு டி20 தொடரில் குரூப்-1 பிரிவில் இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி 4 வெற்றி ஒரு தோல்வியுடன் முதலிடத்தைப் பிடித்தது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற டேவிட் வார்னர் தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில்,நடந்து வரும் டி20 தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.அதேபோல் கேப்டன் ஆரோன் பின்ஞ் ,ஸ்மித் மிட்செல் மார்ஷ் ,மேக்ஸ்வெல் சிறந்த பார்மில் உள்ளன .அதேபோல் பந்து வீச்சிலும் ஆடம் ஜம்பா ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றன.இதுவரை டி20 உலக கோப்பையை வெல்லாத ஆஸ்திரேலிய அணி நடப்பு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.