டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன.
7-வது டி20 உலகக் கோப்பை போட்டியின் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ளது .அதேபோல் நடந்த ‘சூப்பர் 12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் பெரேரா, பதும் நிசங்கா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் லஹிரு குமரா, சமிகா கருணாரத்னே, வனிந்து ஹசரங்கா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றன .
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேசமயம் அணியில் டேவிட் வார்னர் ,கேப்டன் ஆரோன் பிஞ்ச், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் பேட்டிங் மோசமான பார்மில் உள்ளனர்.இதனால் ஆஸ்திரேலியா அணி தனது பேட்டிங் சறுக்கலை சரி செய்ய வேண்டியது அவசியமாகும் .அதேபோல் பந்துவீச்சில் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இதனால் 2-வது வெற்றியை ருசித்தது அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.
உத்தேச பட்டியல்:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
இலங்கை: குசல் பெரேரா, பதும் நிசங்கா, சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஹசரங்கா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, சமீரா அல்லது தீக்ஷனா, லஹிரு குமரா, பினுரா பெர்னாண்டோ