ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன.
துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியோடு மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20ஓவருக்கு 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து. அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 28 ரன் எடுத்தார்.
ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கடைசி ஓவரை ஹாரிஸ் ரவூப் வீச பொல்லார்ட் எதிர்கொண்டார். அந்த ஓவரின் 5பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த பொல்லார்ட் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 131 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடி வருகின்றது.
ஸ்கோர் அட்டவணை:
லெண்ட்ல் சிம்மன்ஸ் 18
டிஆண்ட்ரே பிளெட்சர் 2
கிறிஸ் கெய்ல் 20
ரோஸ்டன் சேஸ் 9
ஷிம்ரான் ஹெட்மியர் 28
நிக்கோலஸ் பூரன் 13
கீரான் பொல்லார்ட் (c) 23
ஹேடன் வால்ஷ் 0*