தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் பார்னெல் வீசிய முதல் ஓவரிலேயே 4 ரன்னில் ஓவரில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் பாபர் அசாம் ஒருபுறம் அடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்க அறிமுக வீரர் முகமது ஹாரிஸ் ரபாடாவின் 2ஆவது ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடித்து மிரட்டினார். தொடர்ந்து அன்ரிச் நார்ட்ஜே வீசிய 5ஆவது ஓவரில் 3ஆவது பந்தில் கீப்பர் தலைக்கு மேல் சிக்ஸ் அடித்த ஹாரிஸ் (11 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 28 ரன்கள்) அடுத்த பந்தில் எல்பிடபிள்யு ஆகி வெளிறினார்.
தொடர்ந்து பாபர் அசாம் 6, சான் மசூத் 2 என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி 6.3 ஓவரில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இத்திகார் அகமது- முகமது நவாஸ் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இதையடுத்து நவாஸ் 28 ரன்னில் 13 வது ஓவரில் அவுட் ஆனார். இதையடுத்து 13ஆவது ஓவரிலிருந்து சதாப்கான் மற்றும் இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சதாப்கான் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்தார்.
அதேபோல இப்திகார் அகமதுவும் அதிரடி காட்டினார். இருவரும் அரைசதம் அடித்தனர். இதைடுத்து சிறப்பாக ஆடிய சதாப்கான் 19வது ஓவரில் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து 20ஆவது ஓவரில் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது.
நசீம் ஷா 5, ஹாரிஸ் ரவூப் 3 ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஆரம்பத்தில் தடுமாறிய பாகிஸ்தான் அணி 150 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சதாப்கான், இப்திகார் அகமது அதிரடியால் நல்ல சவாலான இலக்கை தென்னாபிரிக்க அணிக்கு நிர்ணயித்துள்ளது. தென்னாபிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Pakistan have set South Africa a target of 186 💪
Who is winning this?#T20WorldCup | #PAKvSA | 📝: https://t.co/3VVq7VAJLt pic.twitter.com/PvlMFpFIUA
— ICC (@ICC) November 3, 2022