டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது .
குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, மைக்கேல் லீஸ்க் ஆகிய இருவரைத் தவிர மற்ற வீரர்கள் 20 ரன்கள் கூட எடுக்கவில்லை .இந்திய அணி சார்பில் ஜடேஜா முகமது ஷமி தலா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் இறுதியாகஸ்காட்லாந்து அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது .இதன் பிறகு 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது .