Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது யார் ….? இந்தியா VS நியூசிலாந்து இன்று மோதல் …..!!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது சூப்பர் 12 லீக் சுற்றுகளில் நடைபெற்று வருகின்றன.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது .ஆனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.அதேபோல் நியூசிலாந்து அணியும் தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது .இதனிடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது.இதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக கருதப்படுகிறது .ஏனெனில் பாகிஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதனால் மீதமுள்ள ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளை பாகிஸ்தான் சந்திக்க உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கப்போவது யார் ,என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்றைய போட்டி அமைந்துள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு மட்டும்தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் .ஏனெனில் மீதமுள்ள 3 போட்டிகளில் பலம் குறைந்த ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் எதிர்கொள்ள உள்ளன.

இந்தப் போட்டிகளில் இரு அணிகளுமே எளிதாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கும். இதுவரை டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் 6 முறை இந்தியாவும், 8 முறை நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டையில்  முடிந்துள்ளது. அதேசமயம் டி20  உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி  2 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அரையிறுதி வாய்ப்பில் நீடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகாரித்துள்ளது.இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.

Categories

Tech |