Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: அதிரடி காட்டிய பொல்லார்ட்….! ஆஸ்திரேலியா அணிக்கு 158 ரன்கள் இலக்கு …!!

டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 157 ரன்கள் எடுத்துள்ளது .

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும்  38-வது  லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலே வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி  காட்டியது.

இதனால் 2.1 ஓவரில் 30 ரன்கள் எடுத்தது .இதன்பிறகு 35 ரன்கள் எடுத்திருந்தபோது அணியில் கிறிஸ் கெயில் 15 ரன்னும், பூரன் 4 ரன்னும், ரோஸ்டன் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 157 குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 44 ரன்கள் குவித்தார்.ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

Categories

Tech |