Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்…. புதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் கடந்த வீரர் எனும் சாதனையை நியூசிலாந்து அணியின்  கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்துள்ளார்.

7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் இருந்து இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆஸ்திரேலியா  அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் குவித்தார் .

இதன் மூலமாக டி20 உலக கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மார்லன் சாமுவெல்ஸ் 85 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது தற்போது அந்த சாதனையை கேன்.வில்லியம்சன் சமன் செய்துள்ளார் .இதைத்தொடர்ந்து டி20 போட்டியில் நியூசிலாந்து அணிக்காக 2000 ரன்கள்  கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Categories

Tech |