டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய நிசங்கா 51 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்ததாக அசலங்கா 68 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 46 ரன்னில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர் .இதில் இறுதிவரை போராடிய ஹெட்மையர் 81 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.