டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா 210 ரன்கள் குவித்துள்ளது .
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்ராகுல் களமிறங்கினர் .இதில் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அப்போது அணியின் ஸ்கோர் 140 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 74 ரன்னில் வெளியேறினார் .அடுத்ததாக கேஎல்.ராகுல் 69 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது .இதில் ஹர்திக் பாண்டியா 35 ரன்னும், ரிஷப் பண்ட் 27 ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் . தற்போது களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.