டி20 உலக கோப்பை தொடரில் நமீபியா அணிக்கெதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ,இறுதியில் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் – ஜேம்ஸ் நீஷம் ஜோடி அதிரடி காட்டினர் .இதில் கிளென் பிலீப்ஸ் 39 ரன்னும், ஜேம்ஸ் நீஷம் 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .இறுதியாக நமீபியா அணி 7 விக்கெட்டுக்கு 111 ரன்னில் சுருண்டது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.