டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன .
டி20 உலக கோப்பை தொடரில் துபாயில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ,டிம் சவுதி , மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பக்கபலமாக உள்ளனர் .இதனிடையே காயம் காரணமாக டெவான் கான்வே இறுதிப்போட்டியில்இருந்து விலகியது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது .இதையடுத்து ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத டேவிட் வார்னர் தற்போது ஃபார்முக்கு திரும்பியது அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளது
பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ,ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுபோல் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர் .குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை பொருத்தவரை நியூசிலாந்து அணியில்இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னெர் மிரட்டி வருகின்றனர். அதோடு இன்றைய போட்டியில் டாஸ் மிக முக்கியமானது .குறிப்பாக நடப்பு உலக கோப்பை தொடரில் துபாயில் நடந்த அனைத்து போட்டியிலும் இரண்டாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது என்பதால் இன்றைய போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .
இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
நியூசிலாந்து அணி: மார்டின் கப்தில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேய்ஃபெர்ட், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.