Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : பந்துவீச்சில் மிரட்டிய ஆடம் ஜம்பா ….! வங்காளதேசத்தை 73 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா….!!!

டி 20 உலக கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் வங்காளதேச அணி களமிறங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜம்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச அணி தடுமாறியது .இதனால் 15 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  73 ரன்னில் சுருண்டது. இதில் நைம் 17 ரன்னும்,  கேப்டன் மஹமதுல்லா 16 ரன்னும், ஷமிம் ஹொசைன்  19 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் பிறகு 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்ததாக மிட்செல் மார்ஷ் களமிறங்கினார்.இதில் அதிரடியாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் 20 பந்துகளில் 4 சிக்சர் ,2 பவுண்டரி அடித்து  விளாசி 40 ரன்கள் குவித்தார். மறுமுனையில் மிட்செல் மார்ஷ் 16 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |