டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது .
டி20 உலக கோப்பை தொடரில் இன்று மாலை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார் .ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது .
இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 93 ரன்கள் குவித்தார்.அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 42 ரன்கள் எடுத்தார் .இறுதியாக ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.