7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது .
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியுள்ளது .தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் -கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர் .இதில் இஷான் கிஷன் 4 ரன்னில் வெளியேற , அடுத்ததாக களமிறங்கிய ரோஹித் சர்மா,கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் .இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதில் 18 ரன் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் அவுட் ஆனார் . அவரை தொடர்ந்து ரோஹித் சர்மா 14 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதனால் 10 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் குவித்துள்ளது .