Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : வங்காளதேசத்தை அசால்ட்டாக வென்றது இங்கிலாந்து ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது .

7-வது டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்  இன்று அபுதாபியில் நடந்த போட்டியில் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே குவித்தது.இங்கிலாந்து அணி சார்பில் டைமல் மில்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்பிறகு 125 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 18 ரன்னில் ஆட்டமிழக்க,அடுத்து வந்த டேவிட் மலன்,ஜேசன் ராய் உடன் ஜோடி சேர்ந்தார் .இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இதில் அதிகபட்சமாக  ஜேசன் ராய்  67 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியாக 14.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

Categories

Tech |