முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தனது இந்திய அணிப் பட்டியலைத் தேர்ந்தெடுத்தார்,
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022ல் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லமுடியாமல் வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
எனவே இந்த டி20 உலகக்கோப்பையில் இவர்களை தேர்ந்தெடுத்தால் அணி சரியாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் இந்திய அணியை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தனது கணிக்கப்பட்ட இந்திய அணி பட்டியலைப் பகிர்ந்துள்ளார், ஆனால் வியக்கத்தக்க வகையில் தீபக் சாஹர் மற்றும் முகமது ஷமியை அவர் தேர்வு செய்யவில்லை..
ஐசிசி ரிவியூவில் பேசிய நெஹ்ரா, ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்தார். “டி20 உலகக் கோப்பையைப் பொருத்தவரை நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, எனவே அடுத்த 6 ஆட்டங்களில் கே.எல். ராகுலிடமிருந்து பலவற்றைக் காண்போம் என்று நினைக்கிறேன்”, என்றார்.
விராட் கோலியை 3ஆவது இடத்திலும், சூர்யகுமார் குமாரை 4 அல்லது 5.ல் ஆட வைக்கலாம். “SKY 11ல் இருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் ரிஷப் பந்திற்கு மாற்றாக அவரால் செயல்பட முடியும். அதேபோல 4 அல்லது 5 இல் கூட சூர்ய குமாரை மாற்றிக் கொள்ளலாம். சூர்யகுமாருக்கு பிறகு நம்பர்.5 மற்றும் 6 ஆக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்தார். மேலும் தினேஷ் கார்திக்கையும் தேர்ந்தெடுத்தார்.
பந்துவீச்சு பிரிவில், நெஹ்ரா சுழற்பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார், பின்னர் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தனது வேகப்பந்து வீச்சாளர்களாக பெயரிட்டார். “சாஹல் மற்றும் ஜடேஜா மட்டும் முக்கியம் இல்லை, ரவி அஸ்வினும் கூட முக்கியம். அவர் விளையாடினாலும், அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்”, என்றார்.
மேலும் அவர், எனினும் ஒரு பெயர் என் மனதில் வருகிறது, அது முகமது ஷமி. ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதால், அவர் தேர்வாளர்களிடமிருந்து அவ்வளவு கவனத்தை ஈர்க்கவில்லை. குஜராத் டைட்டன்ஸில் அவரை நெருக்கமாகப் பார்த்ததால் இதைச் சொல்லவில்லை.” வ்ன்று கூறினார்.
ஆஷிஷ் நெஹ்ரா தேர்தெடுத்த 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா(c ), கே.எல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா.