Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup2022 : பிஞ்ச் அதிரடி அரைசதம்…. அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு..!!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது..

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் இறங்கினர்..

இதில் வார்னர் 3 ரன்னில் மெக்கர்த்தி வீசிய 3ஆவது ஓவரில் அவுட் ஆனார். இதையடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ஆரோன் பிஞ்ச் கைகோர்த்து இருவரும் சிறப்பான ஆடி நல்ல துவக்கம் கொடுத்தனர். இதையடுத்து மார்ஷ் 28 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 13 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 84/3 என இருந்தது. இதையடுத்து ஆரோன் பிஞ்ச் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர்..

இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், பிஞ்ச் அரை சதம் விளாசினார். அதன்பின் 44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 63 ரன்கள் எடுத்திருந்த பிஞ்ச் 17 வது ஓவரில் அவுட் ஆனார்.. அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த ஸ்டோய்னிஸ் 19 ஆவது ஓவரில் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து கடைசியில் டிம் டேவிட் 15 ரன்கள் மற்றும் மேத்யூ வேட் 7 ரன்கள் எடுக்க, இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளும், லிட்டில் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Categories

Tech |