Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCupFinal : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு..!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இங்கிலாந்து : 

ஜோஸ் பட்லர் (c & wk), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்.

பாகிஸ்தான் : 

முகமது ரிஸ்வான் (wk), பாபர் அசாம் (c), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி.

Categories

Tech |