7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் குரூப்-1 ,குரூப்-2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன . இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது .அதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்பிரிவில் இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .இந்நிலையில் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு கிட்டும்.அதேசமயம் மோசமாக தோல்வியடையும் பட்சத்தில் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் .இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் 3 வெற்றி ,ஒரு தோல்வி என 6 புள்ளிகள் பெற்றுள்ளது .இதனிடையே இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் பட்சத்தில் 8 புள்ளிகள் பெறும். அப்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் சம நிலையில் இருக்கும் .இதில் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இதனிடையே தென்னாப்பிரிக்க அணியை விட தற்போது ஆஸ்திரேலியா அணி ரன் ரேட்டில் சிறப்பாக உள்ளது .அதோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ,இங்கிலாந்திடம் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றுவிட்டால் இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும் .இதனால் 2-வது இடத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் .அதன் அடிப்படையில் முன்னிலை பெறும் அணி தகுதி பெறும். இதனால் இன்றைய போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .