பிலிப்பைன்ஸில் குமுறி வரும் தால் எரிமலையால் பெரும்பாலானோர் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் உள்ள தால் எரிமலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குமுற ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு எரிமலை திடீரென வெடித்து விடுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம் அதிகாரிகள் எரிமலை வெடிக்கும் என்று உறுதியாக கூற முடியாது என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த எரிமலை சாம்பலையும், புகையையும் ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு கக்கியுள்ளது. இதன் காரணமாக தால் எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து சுமார் 2,400 மக்கள் வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த மக்கள் தங்கும் இடத்தில் நோய் தொற்று எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல நாட்களாக நச்சு வாயுவை வெளியேற்றும் இந்த தால் எரிமலையால் மணிலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மூடுபனி உருவாக ஆரம்பித்துள்ளது. மேலும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தால் எரிமலையிலிருந்து வெளியேறும் நச்சு வாயு காரணமாக 317,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.