ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா உக்ரேன் வீராங்கனை பெசோட்ஸ்காவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற செட் கணக்கில் பெசோட்ஸ்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
தொடக்க ஆட்டத்தின் முதல் 2 செட்டுகளை உக்ரேன் வீராங்கனை எளிதாக கைப்பற்றினார். அதன்பிறகு அதிரடி காட்டிய மணிகா பத்ரா அடுத்தடுத்து 2 செட்களையும் கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தார். இதையடுத்து 5-வது செட்டை பெசோட்ஸ்கா வசப்படுத்தினார். இதனால் அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றிய மணிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.