Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா தயாரித்த மாத்திரை!”.. முன்பதிவுக்கு போட்டியிடும் நாடுகள்.. சுவிட்சர்லாந்திற்கு வைக்கப்படும் கோரிக்கை..!!

கொரோனா தொற்றுக்கு எதிரான மாத்திரைக்கு முன்பதிவு செய்யுமாறு சுவிட்சர்லாந்து பெடரல் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க நாட்டின் Merck & Co என்ற நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தயாரிப்பான molnupiravir என்னும் மாத்திரையால், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் பல நாடுகளும் இந்த மாத்திரையை பெற முன்பதிவு செய்வதற்கு போட்டிபோட்டு வருகிறது.

ஆனால், சுவிட்சர்லாந்து மட்டும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக இந்த மாத்திரை நிறுவனத்தை அணுகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போல  இல்லாமல் இந்த மாத்திரையை பெறுவதற்கு விரைவாக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை குறித்த தகவல் வெளியானவுடன், ஸ்விட்சர்லாந்தின் அரசியல்வாதிகள் பெடரல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். பெடரல் நிர்வாகம், விரைவில் இந்த மாத்திரையை முன்பதிவு செய்தால் தான் விரைவாக கிடைக்கும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

Categories

Tech |