இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா , தடுப்பூசி செலுத்திக் கொள்ள கோவாவிற்கு சென்றபோது அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றன . அந்த வகையில் இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக கோவா சென்றுள்ளார்.
ஆனால் கோவா எல்லையில் அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தினர். கோவாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநிலத்திற்குள் செல்வதற்கு இ- பாஸ் கட்டாயம் என்பதால் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பிரித்வி ஷா ஆன்லைன் மூலம், பதிவு செய்து அனுமதி கிடைத்தபின் கோவாவிற்கு சென்றுள்ளார். இதனால் சற்று பரபரப்பு காணப்பட்டது.