கொரோனா தடுப்பூசி போடுவதைப் பற்றி ,வீரர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென்று, பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வருகின்ற மே 1ஆம் தேதி முதல், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் ,தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு, ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா , என்ற கேள்வி எழுந்துள்ளது.
வருகின்ற மே 1ம் தேதி முதல் வீரர்கள் ,தடுப்பூசி போட்டுக்கொள்வதை பற்றி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று, பிசிசிஐ வட்டாரங்களில் தெரிவித்ததாக ,ஏ.என்.ஐ நிறுவனம் செய்தியை வெளியிட்டது. ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்றுள்ளதால்,அவர்களுக்கு இங்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.