உக்ரைனில் இருந்து அகதியாகவந்த ஒரு அழகிய இளம்பெண்ணுக்காக 10 வருடங்கள் உடன் வாழ்ந்து 2 மகள்களையும் பெற்றுக்கொடுத்த மனைவியைக் கைவிட்டார் ஒரு பிரித்தானியர். உக்ரைனில் இருந்து அகதிகளாக வருவோருக்காக பிரித்தானியர்கள் தங்களது வீடுகளில் இடமளிக்க முன்வந்த சூழ்நிலையில், டோனி (Tony Garnett 29), லோர்னா (Lorna 28) என்ற தம்பதியினர், சோபியா (Sofiia Karkadym 22) என்ற உக்ரைனிய இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடமளித்தார்கள். இந்நிலையில் டோனிக்கும், அப்பெண்ணுக்கும் காதல் பற்றிக் கொண்டது. 10 வருடங்கள் தம்பதியினர் […]
Tag: அகதி
ரஷ்யா, உக்ரைன் மீது 52ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் உக்ரைனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போர் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் […]
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி […]
இலங்கையிலிருந்து கனடாவிற்கு அகதியாக வந்த பெண், தன் தாயின் நகையை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். உலகின் பல நாடுகளில் தற்போதும் பல தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் திருமணத்தில் தனக்கு மிகவும் பிடித்த நகையை மகளுக்கு ஆசையாக அணிந்துவிடுவார்கள். அதைப்போல ஒன்ராறியோவில் வசிக்கும் 30 வயதான சுஜா என்ற பெண், சிறுவயதில் போரிலிருந்து தப்பி தன் பெற்றோருடன் இலங்கையிலிருந்து கனடா நாட்டிற்கு அகதியாக வந்திருக்கிறார். சுஜாவின் தாய், சுஜாவின் திருமணத்தின் போது ஒரு நெக்லஸை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது, […]
மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த அகதி ஒருவரை, தன்னார்வலர் ஆறுதல் கூறி தேற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா என்ற நகரினுள் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்து வருகின்றனர். தடுப்புச் சுவர்களை தாண்டியும் அகதிகள் நுழைந்து வருவதால் சியூட்டா நகரின் எல்லையில் அவர்களை தடுப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அவர்கள், பிடிபடும் அகதிகளை திரும்ப மொரோக்கோ நாட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது வரை சுமார் […]
ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நபருக்கு ஒரு கால் துண்டாகி விட்டது. பிரான்சில் உள்ள Port De Calais- லிருந்து பிரிட்டன் நோக்கி சரக்கு ரயில் ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயிலில் அகதி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக திடீரென்று கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் ரயிலுக்குள் சிக்கி அவரது ஒரு கால் துண்டாகி விட்டது. அதற்குப் பின்பு உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த […]