Categories
உலக செய்திகள்

“சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா திடீர் விலகல்”…? அகதிகளின் உரிமைக்காக உழைத்தவர்… ஐ.நா பாராட்டு…!!!!!!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கார் விருது பெற்ற இவர் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2001- ஆம் வருடம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2012 -ஆம் வருடம் அவர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏஞ்சலினா ஐ.நா உயர் ஆணையத்துடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் தங்களது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றிய நாடு…. சர்வதேச சட்டங்களை மீறி நடவடிக்கை…!!!

துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இடம்பெயர்ந்த 1.40 கோடி மக்கள்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. அகதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட கடை…. எங்கு தெரியுமா?….!!!!!

கொலம்பியாவில் அகதிகளால் உருவாக்கப்பட்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தையல் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடை இலங்கை, வியட்நாம், சீனா, ஈராக், சிரியா,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்து அது அகதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து 60 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள்,  உதாரணம், கனடா ராணுவம், போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறையினர் என பல்வேறு துறையில் பணிபுரிபவர்களுக்கும் சீருடை தயாரிக்கின்றனர். மேலும் இந்த கடையின் பின்னணியில் […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் படகு கவிழ்ந்து விபத்து…. லெபனான் நாட்டு அகதிகள் 73 பேர் உயிரிழப்பு…!!!

லெபனான் நாட்டிலிருந்து வந்த படகு சிரியா நாட்டின் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அதிகமானோர் கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி கொண்டிருக்கிறார்கள். லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பண மதிப்பு 90 சதவீதம் சரிவடைந்திருக்கிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியை இழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் இருந்து […]

Categories
உலகசெய்திகள்

“சட்டவிரோதமாக கடல் கடக்கும் முயற்சி”… பெரும் சோகம்…11 பேர் பலி…!!!!!

கடல் கடக்கும் முயற்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற அகதிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக படகுகளில் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயற்சி செய்து வருகின்றார்கள். இது போன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்கள் துயரத்தில் முடிந்து விடுகின்றது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான […]

Categories
உலக செய்திகள்

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் இலங்கை மக்கள்…. கைக்குழந்தையோடு வரும் குடும்பங்கள்…!!!

இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அந்நாட்திலிருந்து சிலர் பைபர் படகில் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, சில குடும்பங்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி, அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் வசிக்கும் சந்திரகுமார், அவரின் மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிருபாகரன் என்ற நபர், அவரின்  மனைவி மற்றும் குழந்தைகள் என்று மொத்தமாக 8 நபர்கள் தலைமன்னாரிலிருந்து பைபர் படகு வழியாக நேற்று முன்தினம் […]

Categories
உலக செய்திகள்

“ரோஹிங்கயா அகதிகளை திருப்பி அனுப்ப உதவ வேண்டும்”…. பிரபல நாட்டிற்கு வங்கதேசம் வேண்டுகோள்…!!!!!!!!

தங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கின்ற ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்து இருக்கின்றது. அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்யீ தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் வெளியூர் துறை அமைச்சர் ஏகே அப்துல் மோமனையும் சனிக்கிழமை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வங்கதேச அகதிகளால் முகாமில் தங்கி இருக்கின்ற ரோஹிங்கயாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பகாமஸ் கடற்கரையில் கவிழ்ந்த அகதிகள் படகு…. பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு…!!!

பகாமஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஹைதி நாட்டைச் சேர்ந்த 17 அகதிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் 60 பேர் ஒரு படகில் சென்றுள்ளனர். அந்த படகு பகாமஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் சென்ற போது திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த பகாமஸ் ராயல் காவல் படை மற்றும் ராயல் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். அதில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டை நோக்கி செல்லும் உக்ரைன் அகதிகள்…. ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டு அகதிகள் மூன்று மில்லியன் பேர் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறி தங்கள் நாட்டிற்கு திரும்பி விட்டதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர் தொடுக்க தொடங்கியவுடன் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி அகதிகளாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். More than 3 […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு தப்ப முயற்சித்த…. இலங்கை அகதிகள் 67 பேர் கைது….!!!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்ல முயற்சித்த 67 அகதிகள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் விலைவாசியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் உணவு பஞ்சம் ஏற்பட்டு அந்நாட்டை சேர்ந்த பல தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு ராமேஸ்வரத்திற்கு பல மக்கள் […]

Categories
உலக செய்திகள்

மால்டோவாவில் தஞ்சம் புகுந்த உக்ரைன் அகதிகள்… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஐநா பொதுச்செயலாளர்…!!!

ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் மக்கள் பக்கத்து நாடான மால்டோவாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பக்கத்து நாடான மால்டோவாவிற்கு ஐநா சபை பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரஸ் இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களை ஐநா பொதுச்செயலாளர் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் இருக்கும் குடியிருப்புகளுக்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அகதிகள் அதிகமாக குடியேறியதால் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மால்டோவாவிற்கு கூடுதலான ஆதரவை […]

Categories
உலக செய்திகள்

சிரிய அகதிகளை சொந்த நாட்டிற்கே அனுப்ப நடவடிக்கை…. துருக்கி அதிபர் அறிவிப்பு….!!!

துருக்கி அரசு சுமார் 10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து, ஐஎஸ் தீவிரவாத எழுச்சி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சிபடைகள் ஆதிக்கம் செலுத்தியது அதிகரித்ததால், உள்நாட்டு போர் உண்டானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். எனவே, அந்நாட்டை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதன்படி துருக்கி நாட்டில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி…. தமிழகத்திற்குள் நுழைய முயன்ற… இலங்கை தமிழர்கள் கைது…!!!

இலங்கையில் நிதி நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த 14 இலங்கை தமிழர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், இலங்கையை சேர்ந்த தமிழ் மக்கள் படகுகள் மூலமாக அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இலங்கை தமிழர்கள் 14 பேர் தமிழ்நாட்டிற்கு செல்ல முயற்சித்த போது இலங்கை […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் மாயமான குடும்பத்தினரை தேடி… ஊர்வலமாக சென்ற அகதிகள்….!!!

மெக்சிகோவில் மாயமான தங்கள் குடும்பத்தினரை தேடி அகதிகள் அதிகமானோர் சியாபாஸ், ஹிடால்கோ ஆகிய நகரங்களில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். மெக்சிகோ நகரை நோக்கி ஏராளமான அகதிகள் மாயமான தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் பேனர்களை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இதில் அனிதா ஜெலயா என்ற பெண் அமெரிக்க நாட்டிற்குச் சென்ற சமயத்தில் காணாமல் போன தன் மகனை கண்டுபிடிக்க எந்த சிரமத்தை வேண்டுமானாலும் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார். மெக்சிகோவில் பொருளாதார சீர்கேடு இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் உக்ரைன் மக்கள்… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அகதிகளாக சென்ற உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து அரசு, 40 ஆயிரம் உக்ரேன் அகதிகளுக்கு தங்க இடம் வழங்கியது. ஆனால், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த மக்களில் சிலர் தங்கள் நாட்டின் டான்பாஸ் பகுதியை மட்டும் ரஷ்ய படையினர் குறி வைத்திருப்பதால், அந்நாட்டின் சில பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறார்கள். எனவே, தங்கள் நாட்டிற்கே உக்ரைன் மக்கள் திரும்புவதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன்-போலந்து எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், கடந்த […]

Categories
உலக செய்திகள்

உணவுக்காக கையேந்தும் உக்ரைன் அகதிகள்….!! போரால் தொடரும் அவல நிலை…!!

உக்ரைன் ரஷ்யா போரால் சுமார் 40 ஆயிரம் உக்ரைன் மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த 40 ஆயிரம் அகதிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் சுவிட்சர்லாந்து அரசு திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான உக்ரேனிய அகதிகள் உணவுக்காக மத்திய சூரிச்சில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தங்குமிடங்களில் உள்ள அகதிகள் அரசிடமிருந்து சில நிதி உதவிகளை பெறுகின்றன எனினும் அந்த நிதி அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமானதாக இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து….. மேலும் 18 பேர் தமிழகம் வருகை….. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால் அங்குள்ள மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். நேற்று நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 பேர் படகின் மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளன. அவர்களை க்யூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

“போருக்கு மத்தியில் சிறிய மகிழ்ச்சி”…. உக்ரேனிய குழந்தைகளின் கவலைகளை மறக்க விடுதி நிர்வாகத்தின் சூப்பர் ஏற்பாடு….!!

அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள உக்ரைனிய குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த டால்பின்களின் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 47வது நாளாக நீடித்து வருகிறது. குறிப்பாக  ரஷ்ய ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரிலிருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தப்பித்து வந்த உக்ரேனிய மக்கள் ஒடிசா நகரில் தற்காலிகமான அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள  அகதிகளுக்கு விடுதி நிர்வாகம் சார்பில் டால்பின்களின் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் படகு மூலம் 2 குழந்தைகள் உட்பட 19 இலங்கை தமிழர்கள் அகதிகளா தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முன்னதாகவே தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வந்த 20 பேரை அகதிகளாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அகதிகளுக்காக தங்களது வீட்டை கொடுத்த தம்பதியினர்…!! நெகிழ்ச்சி சம்பவம்…!!

உக்ரைன் மீது ரஷ்யா வீரர்களின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் அகதிகள் பிரச்சனையை மேற்கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்டை நாடுகளும் தங்களுடைய முழு ஆதரவை அளித்து வருகிறது. அந்த வரிசையில் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் தீவில் வசிக்கும் Brian மற்றும் Sharon Holowaychuk தம்பதி உக்ரைன் தங்கள் ஓய்வு விடுதியை உக்ரைன் அகதிகளுக்கு குடியிருப்புகளாக மாற்றி உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குடியேற காத்துக்கிடக்கும் உக்ரைன் அகதிகள்….!! கண்கலங்க வைக்கும் புகைப்படம்…!!

போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறுவதற்காக முயற்சி செய்து வரும் உக்ரைன் அகதிகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உக்ரைனில் இருந்து வெளியேறும் ஒரு லட்சம் அகதிகளுக்கு அமெரிக்காவில் இடம் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்காவையும் மெக்சிகோவையும் இணைக்கும் டிஜூவானா நகரத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 700 உக்ரைன் மக்கள் அமெரிக்க குடியுரிமைக்காக காத்து கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

1.1 கோடி பேர் வீடுகளை விட்டு தஞ்சம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு… வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல்ல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்களில் 75 லட்சம் பேர் உக்ரைன் உள்ளேயே உள்நாட்டு அகதிகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள  40 லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து போலந்து சென்ற மக்கள்…. உறவினர்களை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி ரயில் வழியாக போலந்து நாட்டின் எல்லை பகுதியை அடைந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால் அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அதன்படி அந்நாட்டு மக்கள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு போலந்து நாட்டின் எல்லைப் பகுதியை அடைந்துள்ளனர். அங்கு எல்லை அதிகாரிகள், அவர்களை வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்கள் உறவினர்களை பார்த்தவுடன் அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வரும் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடம்… வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்கா உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் அந்நாட்டிலிருந்து 35 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு அகதிகளாக வெளியேறிய மக்கள் பக்கத்து நாடுகளான ருமேனியா, ஸ்லோவாகியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஒரு உயர் அதிகாரி, அமெரிக்கா ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறது என்று […]

Categories
உலகசெய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…. உக்ரைன் அகதிகளுக்கு நிதி… ரஷ்ய பத்திரிக்கையாளரின் செயல்…!!!!

உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார். ரஷ்யாவைச் சேர்ந்தவர்  டிமிட்ரி முரடேவ்(60). இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். நோவாயா காஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நோபல் பரிசு தொகையினை அவர்  மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் கனடா…. வெளியான அறிவிப்பு…!!!

கனடாவில் தலைநகர், உக்ரைன் நாட்டிலிருந்து வரும் மக்கள் தங்கள் நாட்டில் 3 வருடங்கள்  தங்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து, அந்நாட்டின் பல நகர்களை நிலைகுலைய செய்திருக்கின்றன. எனவே, மக்கள் பள்ளிகள், திரையரங்குகள் சமூக மையங்களில் பதுங்கியுள்ளனர். மேலும், தங்களை காத்துக்கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். தற்போதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். இந்நிலையில், கனடாவில் தலைநகர் ஒட்டாவா, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள், […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைனில் இருந்து 300 அகதிகள்… எங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா…?வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மரிய போல் நகரில் ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான் தாக்குதளுக்கு  உள்ளாகி  வருகிறது. இந்த சூழலில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷ்யாவின் ரோஸ் டோவ்  பகுதியில்  அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதனை “கலீஜ் டைம்ஸ்” நாளிதழ் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்க்கே  அகதிகளாக உக்ரைனியர்கள்  சென்று இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

“இங்க இருந்து தப்பித்தால் போதும்”…. பயணத்தில் உக்ரைன் அகதிகள்…. வழியில் காத்திருக்கும் ஆபத்துகள்….!!

உக்ரேனில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினர் நெருங்கி வருவதோடு தலைநகரான கிவ்வை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றது. அதேவேளை மரியுபோல் நகரிலும் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து 26 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு தகவல்…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள்  பலனளிக்காமல் போனது. எனவே, உக்ரைன் போர் உலகளவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் ரஷ்யப் படைகள் ஒவ்வொரு நாளும் தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டிருக்கின்றன. இதனால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் முழுக்க நிலைகுலைந்து போயிருக்கிறது. அந்நாட்டில், பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. அந்த அளவிற்கு ரஷ்யப் படைகள் நாடு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிலிருந்து 25 லட்சம் மக்கள் வெளியேற்றம்… ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்ட பிறகு உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 25 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறது. எனவே, உக்ரைன் மக்கள் தங்களை காத்துக்கொள்ள நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ⚡️UN: At least 2.5 million Ukrainians have fled the country since Russia’s full-scale invasion began on Feb. 24. According to the […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து வெளியேறிய 20 லட்சம் அகதிகள்…. ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைனில் போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள், தங்களை காத்துக் கொள்ள அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு விரைவாக நடந்த வெளியேற்றம் […]

Categories
உலக செய்திகள்

அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும்… கவலையில் ஐ நா சபை…!!!!

ரஷ்ய படையெடுப்பால் வெளியேறும் உக்ரைன் அகதிகள் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என ஐநா சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் வலுத்து கொண்டே வருகிறது. இதனால் உயிரை காத்துக் கொள்வதற்காகவே மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.24 லட்சமாக இருப்பதாகவும் இது விரைவில் 10 லட்சத்தை எட்டும்  எனவும் ஐ.நா அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் செய்தி […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்யா”… அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்….!!!

உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் அகதிகளுக்கு ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உக்கிரன் மீது 4 வது நாளாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன்  மீது குண்டுமழை பொழிந்து சேதத்தை ஏற்படுத்தி வரும்  ரஷ்யா தற்போது உக்ரைனுடன்  மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. வீதியில்இரு  இராணுவத்திற்கும் இடையே போர் முற்றியதால் பொதுமக்கள் யாரும் வீட்டை  விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் உக்ரைனில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! அகதிகள் பயணித்த படகு… கடற்கரையோரம் சென்ற நொடியில்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!

லிபியாவில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 27 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். வட ஆப்பிரிக்க நாடாக லிபியா உள்ளது. இந்த லிபிய நாட்டின் மேற்கு பகுதியில் அல் அவுஸ் என்னும் கடற்கரை நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகே அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி படகிலிருந்த அகதிகளில் 27 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

“ஒரே படகில் அதிகமான அகதிகள் பயணம்!”…. திடீரென்று ஏற்பட்ட விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

கிரீஸில் ஒரு படகில் அகதிகள் அதிகமானோர், பயணித்த நிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டில் அளவுக்கு அதிகமானோர் ஒரே படகில் பயணித்ததால், படகு கடலில் கவிழ்ந்தது. இதில், 11 பேர் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 நபர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். கடலில் கவிழ்ந்த அந்த படகிற்கு அடிப்பகுதியில் யாரும் மாட்டிக்கொண்டிருக்கிறார்களா? என்று மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்பு, மீட்கப்பட்ட மக்களை அருகில் […]

Categories
உலக செய்திகள்

“உயிரை பணயம் வைத்து பயணம்!”…. பறிபோன உயிர்…. மாயமான 30 நபர்கள்…..!!

கிரீஸில், அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில்,ஒருவர் பலியாகியுள்ளார். ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி உயிரை பணயம் வைத்து கடலில் பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக சட்டவிரோதமாக நுழைகிறார்கள். அப்போது, உயிர் பலிகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் வழியே துருக்கியில் இருந்து சுமார் 30க்கும் அதிகமான அகதிகள் படகில் பயணித்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, கிரீஸின் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு சார்பில் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக 4.78 லட்சதிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டில் தஞ்சமடைந்த மக்கள் நாடு திரும்ப வேண்டும்!”…. ஆப்கானிஸ்தான் அரசு கோரிக்கை…..!!

வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள், அங்கிருந்து வெளியேறினார்கள். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள், ஈரான் நாட்டில் தஞ்சமடைந்தனர். அதற்கடுத்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் சுமார் 14 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சரான கலீல் ரகுமான், இவ்வாறு தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள் சுகாதாரம் இல்லாத இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. தண்ணீருக்காக 44 பேர் கொல்லப்பட்ட கொடூரம்…. 1 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம்….!!

வடக்கு கேமரூனில் தண்ணீருக்காக இரு தரப்பு மக்கள் சண்டையிட்டதில் 1 லட்சம் நபர்கள் அகதிகளாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் கூறியிருக்கிறது. வடக்கு கேமரூனில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீருக்காக சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், 40 நபர்கள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடைபெறுவதால், சுமார் 1 லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, Chad என்ற பக்கத்து நாட்டில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் பயங்கர விபத்து!”…. கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 54 பேர் உயிரிழந்த பரிதாபம்….!!

மெக்சிகோ நாட்டில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் சென்ற கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளாகி 54 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரு டிரக்கில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் மத்திய அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளனர். அந்தக் கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதி நெடுஞ்சாலையில் பயணித்தபோது, அபாயகரமான வளைவில் திரும்பியிருக்கிறது. அந்த சமயத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், சுமார் 54 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கு அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை…. பஞ்சத்தால் வாடும் மக்கள்…. தகவல் வெளியிட்ட பிலிப்போ கிராண்டி….!!

ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அங்கு மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை ஐநா சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போரினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வருகின்ற குளிர்காலத்தில் 38 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் பட்டினியால் வாடும் அவலநிலை உருவாகும். அதிலும் […]

Categories
உலக செய்திகள்

“அகதிகள் நுழைவதை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கை!”…. பிரான்ஸ் அரசு நிராகரிப்பு…!!

பிரான்ஸ் அரசு, அபாயகரமான முறையில் பயணித்து தங்கள் நாட்டிற்குள் வரும் அகதிகளை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகள் பல வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்று வருகிறார்கள். இதனால் பல உயிர் பலிகள் ஏற்படுகிறது. இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்கு வரும் அகதிகள் அனைவரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அகதிகள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

அளவுக்கு அதிகமான அகதிகள்…. கடலில் தத்தளித்த 487 பேர்…. துனிசிய கடற்படை அதிகாரிகளின் செயல்….!!

அதிகமான அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு தப்ப முயற்சி செய்தபோது கடலில் தத்தளித்த 487 பேரை துனிசிய கடற்படை அதிகாரிகள் மீட்டனர். அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவைகளால் வாழ்வாதாரம் பாதித்த எகிப்து, சிரியா, சூடான், பாகிஸ்தான், எத்தியோப்பிய மற்றும் பாலீஸ்தீன நாட்டு மக்கள், துனிசியா, லிபியா நாடுகள் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதன்படி அகதிகளை ஏற்றி வந்து நடுக்கடலில் சிக்கிக் கொண்ட படகிலிருந்து 93 குழந்தைகள், 13 பெண்கள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

இப்படிதான் அத்துமீறி நுழையுறாங்க….! அகதிகளுக்கு உதவும் பெலாரஸ்…. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நாடு….!!

பெலாரஸ் பாதுகாப்பு படையினர் அந்நாட்டில் இருந்து போலந்துக்குள் ஊடுருவ முயற்சிக்கும் அகதிகளுக்கு உதவும் விதமாக அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போலந்து நாட்டு வீரர்களின் கண்களில் அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் இராணுவத்தினர் அந்நாட்டின் வழியாக சென்று ஐரோப்பாவில் தஞ்சம் அடைவதற்காக போலந்து ஊடுருவும் அகதிகளுக்கு உதவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் பெலாரஸ் ராணுவ வீரர்கள் லேசர் மற்றும் டார்ச் லைட்டுகளை செரெம்சா என்ற கிராமம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலந்து வீரர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. 31 பேர் உயிரிழந்த சோகம்…. அதிபயங்கரமாக நடந்த விபத்து….!!

இங்கிலீஷ் கணவாய் வழியாக 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற படகு ஒன்று திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதை கண்ட ஃபிரான்ஸ் கடலோர காவல் படையினர் அவர்களில் 2 பேரை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளார்கள். இங்கிலீஷ் கணவாய் வழியாக 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. ஆனால் 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அதிபயங்கர விபத்தினை அப்பகுதியிலிருந்த பிரான்ஸ் நாட்டின் கடலோர […]

Categories
உலக செய்திகள்

“தூங்கிக்கொண்டிருந்த அகதிகள் மீது தாக்குதல்!”.. நாயை விட்டு கடிக்க வைத்த வீரர்கள்.. லிதுவேனியாவில் பரபரப்பு..!!

லிதுவேனியா நாட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் அகதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குள் தஞ்சம் புகுவதற்காக அகதிகள், பெலாரஸ் மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளின் எல்லையில் முகாமிட்டு தங்கியுள்ளனர். இரவு நேரத்தில் கடுமையான குளிர் இருந்ததால், அவர்கள், ஸ்லீப்பிங் பேகில்  தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு படைவீரர்கள், அவர்களை நாயை விட்டு கடிக்க விட்டதோடு, கற்களை தூக்கி எறிந்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானதை […]

Categories
உலக செய்திகள்

மோதல் உருவாகுமா….? தலை தூக்கும் அகதிகள் விவகாரம்…. களமிறங்கும் நேட்டோ படைகள்….!!

சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளை தடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சிரியா, ஈராக் போன்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரசில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அங்கிருந்து அகதிகளாக போலாந்திற்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக அகதிகள் பெலாரஸ்-போலாந்து எல்லையில் குவிந்துள்ளனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் போலாந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு பெலாரஸ் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

‘எங்களை உள்ளே விடுங்கள்’ …. குழுக்களாக முகாமிட்டுள்ள அகதிகள்…. பாதுகாப்பு படையினருடன் மோதல்….!!

எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஐரோப்பிய  நாடுகளுக்குள் மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைய முயன்று வருகின்றனர். இதற்காக போலாந்து எல்லையில் மக்கள் குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதிலும் போலாந்து எல்லைகள் திறக்கப்படாததால் அங்குள்ள Kuznica கிராமம் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைய மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் உள்ள முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கடும்பனி […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்திற்குள் நுழைந்த அகதிகள்…. உணவு பொருள் வழங்கிய அதிகாரிகள்…. ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

இங்கிலாந்திலிருக்கும் ஆங்கிலக் கால்வாயின் மூலம் அங்கு நுழைந்த 1,185 அகதிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உணவு பொருட்களை வழங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்குள் ஆங்கில கால்வாயின் மூலம் சுமார் 1,185 அகதிகள் நுழைந்துள்ளார்கள். அவ்வாறு நுழைந்த அகதிகளுக்கு இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்த் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஆங்கிலக் கால்வாயின் மூலம் அங்கு நுழைந்த அகதிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |