இத்தாலியில் கடலோர காவல்படையினர் கடலில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்க விடிய விடிய போராடியுள்ளனர். சிசிலி தீவு அருகே மோசமான வானிலை காரணமாக ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருந்த அகதிகள் படகானது ஆழம் குறைவான பகுதியில் திடீரென சிக்கியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ட கடலோர காவல்படையினர் சிறிய படகுகள் மூலம் ஆழம் குறைவான பகுதியில் சிக்கி தவித்த 396 அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணியானது விடிய விடிய நடந்துள்ளது. மேலும் இந்த […]
Tag: அகதிகள்
பெலாரஸிலிருந்து குடியேறும் நோக்கத்துடன் போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் அந்நாட்டின் எல்லையில் காயங்களுடன் காத்திருக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. பெலாரஸிலிருந்து போலந்து நாட்டிற்கு வரும் அகதிகள் பெலாரஸ்-போலந்து எல்லையில் கூடாரங்கள் அமைத்து கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் போலந்து நாட்டைச் சேர்ந்த படையினர் அந்நாட்டிற்குள் நுழைய முற்படும் அகதிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலந்து படையினருக்கும், அகதியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அகதிகள் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே […]
வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். வார்சா: பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்யும் பிரச்சனைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமரான மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி பேசியதாவது “பெலாரஸில் இருந்து போலந்துக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் படையெடுத்து வருவதற்கு ரஷ்யாதான் […]
நடப்பாண்டில் மட்டுமே ஆங்கிலக் கால்வாயின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்த குழந்தை அகதிகளில் 9 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 744 முறை காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்குள் பிற நாடுகளிலிருந்து ஆங்கில கால்வாய் மூலம் நுழையும் அகதிகள் அங்கிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகளில் நடப்பாண்டில் மட்டுமே 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 744 முறை காணாமல் போயிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் […]
ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த 2015ஆம் ஆண்டு தான் செய்தது சரியானது என்பதை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளார். உலக நாடுகள் பிற நாடுகளிலிருந்து அகதிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்பதால் தங்கள் நாட்டின் எல்லையில் தடுப்பை வைத்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சில காரணங்களால் வெளியேறிய 1 மில்லியன் அகதிகளை ஜெர்மனியின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் தங்கள் […]
தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப மாட்டோம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். அதில் அவர், “அமைச்சர் என்ற முறையில் உங்களுடைய ஆய்வு கூட்டத்தில் நான் சொன்னேன் நாங்கள் எப்போதும் உங்களை காக்கின்றவர்களாக இருப்போம். யாரையும் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்வோம். உங்களை கட்டாயப்படுத்தி அனுப்ப மாட்டோம். நீங்கள் விரும்பினால் அனைத்து வசதி வாய்ப்பும் ஏற்படுத்தி உங்களுடைய ஒப்புதலோடு அந்த அரசாங்கத்தில் தகவலை தெரிவித்து உங்களை […]
பிரிட்டனில் பணியாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை பயன்படுத்தலாம் என்று நாட்டின் நிதித்துறை செயலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். பிரிட்டனில், மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி வந்த ஐரோப்பியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரெக்சிட் மற்றும் ஊரடங்கு காரணமாக சொந்த நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் நாட்டில் பணியாளர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மில்லியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பிரிட்டன் நீதித்துறை செயலரான Dominic Raab, ஆயுள் தண்டனை […]
கிட்டத்தட்ட 10,000 அகதிகள் ரியோ கிராண்டி என்னும் ஆற்றை கடந்து அமெரிக்காவிற்குள் நுழைந்து அந்நாட்டிலுள்ள நெடுஞ்சாலை பாலம் ஒன்றுக்கு கீழே தஞ்சமடைந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாவட்டத்தில் டெல் ரியோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் தென் அமெரிக்காவிலிருந்து ரியோ கிராண்டி என்னும் ஆற்றைக் கடந்து சுமார் 10,000 அகதிகள் இந்த டெல் ரியோ என்னும் நகரத்திலுள்ள பாலம் ஒன்றிற்கு அடியில் குவிந்துள்ளார்கள். இதனையடுத்து பாலத்திற்கு அடியே குவிந்த அகதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அந்நகரத்தின் பாதுகாப்பு […]
சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதிலும் பிரான்சில் இருந்து கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக 28.2 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா பிரான்ஸ்க்கு வழங்கியுள்ளது. இருப்பினும் கால்வாயை கடந்து வருவோரின் எண்ணிக்கையானது குறைந்த பாடில்லை. […]
பிரித்தானியாவிற்குள் அத்துமீறி நுழையும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவது தொடர்பாக வெளியுறவு செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவிற்கு மக்கள் சட்டத்திற்கு புறம்பாக பிரான்சில் இருந்து கடல் எல்லையைத் தாண்டி படகுகளில் வருகின்றனர். அவர்களை திருப்பி அனுப்பும் விதமாக சட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து பிரித்தானியா வெளியுறவு செயலாளர் பிரீத்தி பட்டேல் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் திட்டத்தையும் மீறி நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருக்கும் கலாயிஸ் துறைமுகத்தில் திரண்டுள்ளனர். இது குறித்து தகவல் சேகரிக்க […]
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாப்பாத்தி இலங்கை அகதி முகாமில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்- திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி பார்வையிட்டார். இதையடுத்து அங்குள்ள மக்கள் பல வருடங்களாக இருள் சூழ்ந்திருந்த வாழ்விற்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வந்திருக்கிறார் என்று கனிமொழியை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். கனிமொழியும் முகாமில் வசிக்கும் மக்களோடு பாசத்தோடு பேசி அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு வசிக்கும் 457 குடும்பங்களுக்கு […]
ஆப்கானில் ஆபத்தில் உள்ளவர்களை அழைத்து வருவதற்கு ஜெனீவா சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அதிலும் ஆப்கானியர்களை இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஜெனீவா மாகாணம் அவர்களுக்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று மொத்தம் 23௦ பேரை காபூலில் இருந்து சுவிட்சர்லாந்து அரசு அழைத்து […]
ஆப்கானிஸ்தான் அகதிகள், தங்கள் நாட்டிற்கு வருவதை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட மக்கள் நேற்று மதியம் நெதர்லாந்து நாட்டிற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்காக நெதர்லாந்தில் அவசர முகாம்கள் 4 அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், Harskamp-ல் இருக்கும் ராணுவ முகாமும் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, வந்த 800 நபர்களை இந்த முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் வருவதை எதிர்த்து […]
ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது இங்கிலாந்த் அரசாங்கம் தலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்கு தங்களுடைய நாட்டில் அடைக்கலம் […]
ஆப்கானிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என SP தேசிய கவுன்சிலர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுதை அடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்களால் நாட்டின் முழு அதிகாரமும் கைப்பற்றப்பட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மறுபடியும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது உலக அளவில் பெரும் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது. மேலும் 2001ல் அமெரிக்காவின் பொறுப்பற்ற வெளிநடப்பு நடந்தது. அதே போன்று தற்பொழுதும் அமெரிக்கா படைகள் […]
அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜெர்மனியில் Burbach என்னுமிடத்தில் புகலிட மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில் அகதிகள் வசித்து வருகிறார்கள். இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு புகலிட மையத்தின் பாதுகாவலர்களும் சமூக சேவகர் ஒருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கு வாழும் அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்கள். அதாவது அங்கு வாழும் அகதி ஒருவரை புகலிட மையத்தின் பாதுகாவலர்கள் அடித்து சித்திரவதை […]
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு 5 லட்சம் அகதிகள் வருவார்கள் என்று நாடாளுமன்றத்தில் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த நாள் முதல் இன்று வரை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான் அரசு அவர்களை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விவரங்களை கண்காணிக்கும் குழு ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு 5 […]
முகாமிற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 அகதிகளுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கிரீஸில் அமைந்துள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 13,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதில் தங்கியிருக்கும் அகதிகளில் சுமார் 70% பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து முகாமில் எவ்வாறு […]
ஐரோப்பியாவில் நுழைவதற்காக மத்தியதரைக் கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான இத்தாலியில் லம்பிடுசா தீவுக்கு செல்வதற்காக உள்நாட்டுப் போர் வறுமை பயங்கரவாதம் போன்ற காரணங்களால் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நேற்று கடலில் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் பகுதியை கடப்பதற்கான முயற்சி ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அகதிகள் பயன்படுத்திய படகு மத்திய தரைக்கடல் பகுதியில் சென்றி கொண்டிருக்கும் […]
டென்மார்க் நாட்டில் அகதிகளாக இருக்கும் சிரியா மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப டென்மார்க் முடிவு செய்துள்ளது. சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறி டென்மார்க்கில் உள்ள 94 சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் டென்மார்க் அவர்களின் வாழிட உரிமத்தையும் ரத்து செய்துள்ளது .டென்மார்க் சிரிய அகதிகளை அவர்களின் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்க்கு அனுமதித்ததே தவிர கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பவில்லை. அவ்வாறு […]
நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்ததில் 22 அகதிகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகு ஒன்றின் மூலம் பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் அகதிகள் வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கியவர்களை தேட ஆரம்பித்தனர். […]
ஆப்பிரிக்காவிருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அகதிகளின் படகு லிபியாவில் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சினகல், மாலி, சாட், கானா போன்ற பகுதிகளிலிருந்து வந்த அகதிகளின் படகு லிபியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்பு பணியில் […]