மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]
Tag: அகற்றம்
மும்பையில் புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினாலான கர்னக் மேம்பாலம் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்து 2014 ஆம் ஆண்டு பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர்க் குழு கடந்து 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பபற்றது என்று சான்றிதழ் அளித்தது. இதனையடுத்து பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் […]
காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவுசெய்து இருக்கிறோம் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இது தொடர்பாக மந்திரி கிரண் ரிஜிஜு ஷில்லாங்கில் கூறியதாவது “சில பழைய சட்டங்கள் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் மீதான இணக்க சுமையை நாம் குறைக்கவேண்டும். சாமானிய மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆட்சி இருக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி விரும்புகிறார். தேவையற்ற சட்டங்கள் சாமானியர்களுக்கு […]
முல்லைப் பெரியாற்றிலிருந்து அனுமதி இன்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அதிகாரிகள் அகற்றினார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் தென்னை, நெல், வாழை, திராட்சை உள்ளிட்டவைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் குழாய்களில் அனுமதி இல்லாமல் தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று சோதனை செய்ததில் அனுமதி இன்றி விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை […]
தீண்டாமை சுவரை அதிகாரிகள் இடித்ததால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சென்ற ஐம்பது வருடங்களாகவே வசித்து வருகின்றார்கள். இவர்கள் செல்லும் பொது வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக சொல்லப்படுகின்றது. இதனால் இந்த சுவற்றை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் […]
பழனி நகரின் மையப் பகுதியில் வையாபுரி குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறைக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன் வையாபுரி குளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குலத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பொதுப்பணி துறையினர் முடிவெடுத்திருக்கின்றனர் அதன்படி […]
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ஆவார். இவர் குரோம்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு மாணவி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளால் தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக […]
கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கப்பட்டு இருந்தது இவற்றை அகற்றும் பணி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைவீதி, மும்முனை சந்திப்பு, கள்ளக்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் பேனர்கள் பலகைகளை பேரூராட்சி ஊழல்கள் அப்புறப்படுத்தினர். மேலும் இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தார்கள் .
சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, சென்னை மாநகராட்சி சார்பாக 200 வார்டுகளிலும் நேற்று தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள 1,705 விளம்பர பலகைகள் மற்றும் பேனர்கள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. மேலும் தூய்மை பணிகளில் 171.28 டன் கழிவுகள், சாலை ஓரங்களில் கிடந்த தேவையற்ற இரும்பு ஆகியவையும் அகற்றப்பட்டது. அதேபோன்று மாநகராட்சியும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து பெசன்ட்நகர் கடற்கரையில் “சுத்தமான கடற்கரை பாதுகாப்பான கடல்” என்ற […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக அலுவலகம் அருகே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக அலுவலகத்தை மீண்டும் திறக்க உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை இன்று அதிகாரிகள் அகற்றினர். 11 நாட்களுக்கு பிறகு இன்று அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு மையத்தில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை கழட்ட வற்புறுத்தியதாக மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருவர் தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்க்கோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியாக பரிசோதித்தனர். மெட்டல் மூலம் பரிசோதனை செய்தலில் மாணவிகளின் உள்ளாடைகளில் […]
சென்னை மாநகராட்சியில் பறக்கும் படை குழுவினரால் கடந்த 1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகள், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளில் பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால்களில் 32 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி சாலையோரம் இருக்கும் மரங்களை அதிகாரிகள் அகற்றினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் சாலையோரம் இருக்கும் மரங்கள் குறித்து தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் மரங்கள் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
அதிக ஒலி எழுப்பக்கூடிய எர்ஹாரன்களை பொருத்தப்பட்ட பேருந்துகளில் இருந்து அதனை போக்குவரத்துத்துறை அதிகார்கள் அகற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் செல்லும் பேருந்துகளில் அதிகளவில் எர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதில் வரும் அதிக ஒலியால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருவதாக போக்குவரத்து கழகத்துக்கு புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசிங் தலைமையில் அதிகாரிகள் ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு […]
சட்ட விரோதமாக செய்யப்பட்ட 50 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கட்டவிளாகம் ஊராட்சியில் கீழ்குடி கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் கீழ்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முழுமையாக அகற்றியுள்ளனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மண்டல துணை தாசில்தார் ஜஸ்டிஸ் பெர்னாண்டோ, மங்கலக்குடி வருவாய் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ஒட்டப்பட்ட 3,705 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]
ஆனைமலை அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. 1,400 மாணவிகளும் 40 ஆசிரியர்களுடன் செயல்படும் வி.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ளது. இந்த பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் பழுதடைந்து காணப்பட்டதால் பள்ளி சார்பில் 4 வகுப்பறைகளையும் இடிக்குமாறு பொதுப்பணித்துறையிடம் வேண்டுகோள் வைத்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜேசிபி எந்திரத்தின் மூலம் நான்கு வகுப்பறைகளையும் […]
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலை பட்டி என்ற பகுதியில் காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு துறையினர் பயிற்சி செய்யும் போது வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது . அந்த வகையில் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அரையாண்டு விடுமுறையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் […]
சென்னையில் 17 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதிக மழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்கள் வெள்ள காடாக மாறியது. மேலும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப்பாதைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை […]
சென்னையில் இன்று வரை 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னையில் தீபாவளி அன்று குவிந்துகிடக்கும் பட்டாசு குப்பைகளை நீக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று காலை வரை 48 டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நாளை வரை பட்டாசு கழிவுகள் நீக்கப்பட உள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் தினமும் 5,200 டன் குப்பை சேகரிக்கப்படும் ஆனால் தீபாவளி அன்று […]
தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலைகளின் நீளத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 46 சுங்கச்சாவடிகள் […]
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றும், பணம் பட்டுவாடா புகார் வந்தால் உடனே அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
நிவர் புயலின் காரணமாக மின் வயரில் விழுந்த மரக்கிளையை உயிரை பணையம் வைத்து ஊழியர் ஒருவர் அகற்றி உள்ளார். நிவர் புயல் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடந்து சென்ற நிலையில் பல கட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. https://www.dailymotion.com/video/x7xpsog இதுபோன்று மரக்கிளை ஒன்று மின் கம்பத்தின் மேல் விழுந்ததை மின் ஊழியர் ஒருவர் தன் உயிரை பணையம் […]
நிவர் புயல் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் பேனர்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 290 கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரம் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் நாளை நண்பகல் வரை புயல் கரையைக் கடக்கலாம் என்று நம்பப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோமீட்டர் முதல் […]
மார்ச் மாதம் முதல் இதுவரை மருத்துவமனைகள், தனிமை முகாம்கள், ஆய்வகங்களில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த மருத்துவ கழிவுகள் மூலம், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 46 கிலோ மருத்துவக்கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த மருத்துவக்கழிவுகளை சுத்திகரிப்பு […]