ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல அலங்கார பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்ட குழியிலேயே தற்போது வெண்கலத்தாலான அலங்கார பொருட்கள் கண்டறியப்பட்டிருக்கின்றது. வெண்கலத்தலான அலங்கார ஜாடியின் மீது ஆடு, மான், நீர் கோழி, நாய், தூண்டில் உள்ளிட்டவை இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஜாடியின் ஒரு பகுதி சேதம் அடைந்தும் அதன் மீது மான் […]
Tag: அகழாய்வு
சென்னையை அடுத்த வடக்குபட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் நான்கு நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்குபட்டு கிராமத்தில் வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் பல்வேறு வருடங்களாக தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அகல ஆய்வு நடைபெற்ற குழியில் 75 சென்டிமீட்டர் ஆழத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல்லாலான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இடைக்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடையேயான காலகட்டத்தில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது […]
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகில் உள்ள கொந்தகையில் அகழாய்வு நடைபெற்று வருகின்றனர். அதில், கண்டெடுக்கப்பட்ட 134 முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.இதில் 116, 123 ஆகிய எண்களை கொண்ட முதுமக்கள் தாழிகள் ஆய்வாளர்கள் திறந்தனர். அந்த தாழிகளில் மனித மண்டை ஓடு எலும்புகள், சிறிய பானைகள், கிண்ணங்கள், முன்னோர்கள் இறுதிச்சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் ஆகியவை இருந்தது. இந்த பொருட்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைக்கும் போது மேலும் பல்வேறு விவரங்கள் […]
தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பண்டைய கால யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 7-வது அகழாய்வு குழியில் தோண்டியபோது பழங்காலத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் யானை தந்தங்களை வைத்து ஆபரணங்கள் போன்ற பொருட்கள் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுடுமண்ணால் செய்யப்பட ஏராளமான அகல்விளக்குகள் கிடைத்துள்ளது. […]
தொல்லியல் ஆய்வுகள் மூலமாக சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் தொல்லியல் அகழாய்வு பற்றிய புதிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கிறார். அப்போது அவர் பேசிய போது, புதிய தொழில்நுட்பம் மூலமாக தொல்லியல் மற்றும் அகழாய்வுகள் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 4,700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பின் பயன்பாடு இருந்திருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக […]
தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சட்டசபையில் இன்றும் நாளையும் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் வசம் இருக்கின்றது. சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின் சமூக […]
கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்நிலையில் […]
கீழடியில் உள்ள 8-ம் கட்ட ஆய்வு பணியில் 4 அடி ஆழத்தில் தோண்டும் பொழுது சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானையும், முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் மத்திய அரசு சார்பாக மூன்று கட்டங்கள் ஆய்வுப் பணியும், மாநில அரசு சார்பாக நான்கு கட்ட ஆய்வு பணியும் நடந்து முடிந்துள்ளன. தற்போது வரை மொத்தம் ஏழு கட்ட ஆய்வு […]
மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பு வனம் அருகே கீழடியில் 2015ஆம் வருடம் முதல் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகளானது நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 2018ஆம் வருடம் முதல் தமிழகம் தொல்லியல்துறை சார்பாக நான்கு கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ள நிலையில், இங்கு கிடைத்த தொல் பொருட்கள், உலகரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகிறது. இதுவரையிலும் நடந்த 7 கட்ட அகழாய்விலும் மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் 8ம் கட்ட […]
தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்த முதல்வர் முக. ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தொல்லியல் அகழாய்வு, சங்க காலம் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காணவும், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரை பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அகழாய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. தன்பெருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புல ஆய்வு நடத்தப்படும். 7 இடங்களில் அகழாய்வுகள்: சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் […]
ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் தமிழக தொல்லியல்துறை குறித்த ஆய்வுகள் இடம் பெறாதது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகிலுள்ள கீழடியில் 7 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் மூன்று கட்ட அகழ்வாய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையினாலும் மற்ற நான்கு கட்ட ஆய்வுகளை தமிழ் தொல்லியல் துறையினாலும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் […]
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் கீழடியில் அகழாய்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. கொரோனா ஊரடங்காள் நிறுத்தப்பட்ட அகலாய்வு பணிகள் ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் திரு பெருமாள் தலைமையில் குழுவொன்று கீழடிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளது. கீழடி அகழாய்வுகாக தோண்டப்பட்ட குழியில் […]
ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பை உருக்க பயன்படுத்தக்கூடிய உலை, விலங்கின் மண்டை ஓடு ஆகியவை கிடைத்துள்ளது. பெருங்கற்கால கல்வட்டம், ஈம சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. குறிப்பாக, தமிழகத் தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கொடுமணலில் ஏற்கனவே அளவீடு செய்து பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளில் அகழாய்வு […]
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக அரசால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வு பணிக்காக சிவக்களைக்கு ரூ.32 லட்சம், ஆதிச்சநல்லூருக்கு ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே 5 முறை மத்திய தொல்லியல் துறை மற்றும் வெளிநாட்டினரால் ஆய்வு நடத்தப்பட்டது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் கடத்த வாரம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் […]
கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]