சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழடி மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் தமிழர்களின் பண்டை பழங்கால நாகரிக அடையாளங்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று உயர்நீதிமன்ற […]
Tag: அகழாய்வு பணி
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் சிவகளை மற்றும் கோர்க்கை பகுதிகளில் அடுத்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் சிவக்களையிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த அகழ்வாராய்ச்சி கடந்த 1-ம் தேதி முடிவு பெற்றது. இதில் ஆதிச்சநல்லூரில் 27 முதுமக்கள் தாழியும், சிவக்களையில் 34 முதுமக்கள் தாழியும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த இடங்களில் தமிழ் பிராமி […]
ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை தொடங்க இருந்த அகழாய்வு பணிகள் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு […]
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி மூலம் இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில், 2015ம் ஆண்டில் அகழாய்வு துவங்கியது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ச்சியைத் தொடங்கியது. 10.5 மீட்டர் ஆழம் கொண்ட 42 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 6 மாதங்கள் வரை […]