செங்கல் சூளை புகை போக்கி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் செங்கல்சூளையில் இருந்த புகை போக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஏழு பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tag: அசாம்
அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஆனந்தகுமார் என்ற மாணவர் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவர் திடீரென விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக […]
அசாம் மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையான சகஸ்திர சீமா பால் வீரர் வீட்டில் 13 வயது நிரம்பிய பழங்குடியின சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா சர்மாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்று இருந்துள்ளது. அதோடு சிறுமியின் குடும்பத்தினரும் […]
அசாம் மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்று அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்.தலைமைச் செயலகத்தில் […]
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால் தடுப்பு நடவடிக்கையாக திபு மாநகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட […]
கர்நாடக எல்லையான திருப்பாளையா என்னும் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கட்டிட தொழில் செய்து வந்தனர். அப்போது இவர்கள் ஐந்து பேரும் youtube வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் சிசிடிவி வீடியோக்களை கொண்டு […]
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் சூறாவளி புயலானது வங்காளதேச நாட்டின் சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையை கடந்தது. சூறாவளியால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவின் அசாம் உள்ளிட்ட க மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்காளதேசம் எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், […]
அசாம் மாநிலத்தில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அம்மாநிலம் அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி தகுதி வாய்ந்த 35 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பன்னிரண்டாவது வகுப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கிய 29,748 மாணவிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பின் வாங்கிய 6,052 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் இந்த முடிவு கவுகாத்தி நகரில் முதல் மந்திரி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்காக 258.9 கோடி நிதி […]
அசாமில் நல்ல படிக்ககூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர்கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்குவதற்கு அரசு முடிவுசெய்து இருக்கிறது. அந்த வகையில் தகுதிவாய்ந்த 35,800 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். இதற்குரிய முடிவானது கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல்-மந்திரி ஹிமந்தா […]
அசாம் மாநிலத்தில் உள்ள கரீம் கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பசார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த 2 கைதிகளும் என்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், கைதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருந்தபோது கைதிகளில் ஒருவரை ஒரு போலீஸ்காரர் கடுமையான சித்திரவதை செய்துள்ளார் என்று கூறினார். அதோடு அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி கைதியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி […]
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் லங்கா நகரில் ஹல்பகன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு குட்டி யானை ஒன்று வழி தவறி வந்துள்ளது. அந்த குட்டி யானை தன்னுடைய தாயை பிரிந்ததால் வழி தெரியாமல் கண்ணீர் வடித்துள்ளது. அப்படி தனியாக தவித்து கண்ணீர் வடித்த அந்த யானையை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விரட்டி விரட்டி அடித்து வாலை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த குட்டி யானையோ அந்த அரக்கர்களிடமிருந்து […]
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி என்ற இடத்தில் காண்டாமிருகம் ஒன்று வேகமாக வந்த லாரி மீது மோதிய வீடியோவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு காண்டாமிருக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது லாரியின் மோதி தாக்கப்பட்ட பிறகு அந்த காண்டாமிருகம் எழுந்து நின்றது. அதன் பிறகு மீண்டும் கீழே விழுந்து, பின்பு மீண்டும் காட்டுக்குள் ஓடியது. இது பற்றி அவர் கூறியது, காண்டாமிருகங்கள் சிறப்பு […]
அசாம் மாநில துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அப்துல் விஸ்வாஸ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி கூறினார். அந்த நபர் பாலில் […]
அசாம் சட்டப்பேரவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு முதல்வர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கடந்த 2016 முதல் 2022 வரை காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட 5 இயக்கங்களில் 1,561 இளைஞர்கள் இணைந்துள்ளனர். அதனைப் போல இந்த காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட 23 இயக்கங்களை சேர்ந்த 7,935 பேர் அரசிடம் சரணடைந்துள்ளனர். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த […]
வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான அசாமில் இடைநிலை கல்வி வாரியம் அசாம் நடத்தும் அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 3 குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கின்ற சுமார் 30000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதில் குரூப்-4 தேர்வுகள் கடந்த 21 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் குரூப் 3 தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது. மேலும் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதியும் […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதோடு 2 வருடங்களாக தேர்வு நடைபெறாமல் இருந்ததால் அனைவரையும் ஆல்பாஸ் செய்ததும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது […]
10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வியடைந்ததால் 34 பள்ளிகளை அரசே மூடமுள்ள சம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது.அசாம் மாநிலத்தில் உலா மாவட்டத்தில் பல பள்ளிகள் செயல் படுகின்றன. அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மாநிலத்தில் 34 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 34 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது […]
அசாம் மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடி ஒன்று மணமகள் தினமும் புடவை அணிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் மற்ற ஜோடிகளை போல இல்லாமல் தனித்துவமான ஒன்றை செய்ய முயற்சிக்கிறார்கள். அதாவது இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில் மணமகன், மணமகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு கண்டிஷன்களை முன் வைத்துள்ளார். ஜிம்முக்கு செல்வது முதல் ஷாப்பிங் செல்வது வரையிலான ஒப்பந்தங்கள் அனைத்தும் அதில் […]
அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரையும் பறித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவக்கூடிய இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே கடந்த 9 நாட்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மூளை காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் […]
அசாமை சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. சமீபத்தில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ,அவரது உடலை அசாமுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் அவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]
அசாமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதனைதொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கப்பட்டு உள்ளது. அதனைபோல தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போலீசாரும் இணைந்து இந்தப் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு தற்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் அசாம் மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை தொடரும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நிலவும் மோசமான வெள்ள […]
என பல்வேறு வகையான டீ இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்குகிறது. அசாம் டீக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் அரிய ரக டீ ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கோலகாட் என்ற மாவட்டத்தில் பாபோஜன் கோல்டு டீ என்ற புதிய அரிய வகை டீ உற்பத்தி […]
அசாமில் விஸ்வநாத் மாவட்டத்தில் புல்புலி கட்டடூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று குழந்தைக்கு தாய் ஆவார். கடந்த 12 ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார். இவர் 22 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப சூழலால் படிப்பை கைவிட வேண்டி இருந்தது. அதன் பிறகு காலங்கள் ஓட திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். ஆனால் அவரது கல்வி தாகம் தணியவில்லை. இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வை பக்ருதீன் அலி அகமது […]
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. அவ்வாறு, அசாம் மாநிலத்தில் கூடுதல் மழைபொழிவின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அசாமில் உள்ள பொது மக்களின் வாழ்வாதாரம், இக்கனமழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளது. மேலும் 4.03 லட்சம் மக்கள் அசாம் மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, […]
அசாம் மாநிலத்தில் உள்ள நகோன் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட நபர் திடீரென உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்கு வைக்கப்பட்ட தீயில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சபிகுல் இஸ்லாம் என்ற நபர் தனது தொழில் நிமித்தமாக சிவசாகர் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். […]
அசாமில் வெள்ளத்தில் ரயில் பெட்டிகள் மிதக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. மேலும் நிலச்சரிவுகள் மற்றும் மழை, வெள்ளம் காரணமாக ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மழை வெள்ளத்தால் சில்சார்-கௌஹாத்தி விரைவு ரயில் அந்த மாநிலத்தின் காச்சர் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டு […]
சமூக விரோத செயல்களைத் தடுக்கும் அடிப்படையில் அசாமின் எல்லையோர மாவட்டமான சிவசாகரில் 144 தடை உத்தரவும், நகாலாந்தில் இரவுநேர ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 60 நாட்களுக்கு (அல்லது) மறு அறிவிப்பு வரும் வரையிலும் நடைமுறையில் இருக்கும். இதில் எல்லையில் மாலை 6.00 மணிமுதல் காலை 6:00 மணி வரை வாகனங்களில் சுற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஐபிசியின் 188-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை […]
பார்வை குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான சென்சார் பொருத்திய ஷு ஒன்றை நாசாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உருவாக்கியுள்ளான். கரிம்கஞ்ச் என்ற மாவட்டத்தை சேர்ந்த அன்குரித் கர்மாகர்என்ற சிறுவன் கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையிலான பிரத்தியேக ஷூவை வடிவமைத்து உள்ளான். இதனை பார்வை குறைபாடு உடையவர் அணிந்து செல்லும் போது எதிர்வரும் தடைகளை ஷுவில் பொருத்தியுள்ள சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அந்த நம்பருக்கு எச்சரிக்கை செய்யும் என சிறுவன் தெரிவித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு […]
அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் வழிப்பறி செய்யும் ஒருவர் பணம் பறித்துவிட்டு கத்தியால் தாக்கி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் டெல்லியில் மோமோ என்ற உணவுப் பண்டத்தை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.அப்போது இரவு 10 மணி அளவில் தனது மனைவியுடன் பூங்காவில் […]
அசாமில் பறவை காய்ச்சல் காரணமாக 100 க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது . கனமழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக, அசாமில்பர்ஹாம்பூரில் நகரில் உள்ள சாந்தி வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. இதைக்கண்ட உள்ளூர்வாசிகள் நெருப்பு மூட்டி மீதமிருந்த பறவைகளை காப்பாற்றியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனசரக அதிகாரி மலாகர் பேசுகையில் , கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம். மேலும் அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லபடும். அவற்றை குணப்படுத்த முடிந்தவரை […]
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு பிப்ரவரி 15 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை கருத்தில் கொண்டு ஜனவரி 25 முதல் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த மாதத்தில் இருந்து மூடப்பட்ட 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தனிப்பட்ட நபரின் விருப்பமில்லாமல் யாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. […]
அசாமில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு இன்று முதல் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, அசாமில் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இன்று முதல் செல்ல தடை என்று கூறினார். மேலும் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறபிப்பதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது […]
அரசு ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மூன்றாவது அலையின் காரணமாக இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுவோர் […]
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாம் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு, இனி இரவு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனாபரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல மாநிலங்களில் […]
அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை இனிதாக செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 8 சனிக்கிழமை மற்றும் ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் ஆகும். எனவே மொத்தம் 4 நாட்கள் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இப்படி கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும் செய்தியை அம்மாநில முதல்-மந்திரி. ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஊழியர்கள் ஜனவரி […]
ஒடிசா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் புத்தாண்டு மற்றும் புத்தாண்டு தினங்களில் சுற்றுலாத்தளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு ஒடிசா அரசு தடை விதித்துள்ளது. உணவகங்கள் மற்றும் வேறு எந்த இடங்களில் எந்தவித கலாச்சாரம் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படாது. மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம். […]
அசாம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனிதக் குழந்தையைப் போலவே குட்டியை ஈன்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஆடு வளர்ப்பவர் கூறியது, ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆட்டுக்குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என்று கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று ஆடு குட்டி போட்ட போது அது முழுசாக வளராத மனித குழந்தை போல் இருந்தது. […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அசாம் மாநிலத்தில் டிசம்பர் 26 ஆம் தேதியான இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு அறிவித்துள்ளது. இரவு ஊரடங்கு இரவு […]
அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையில் ஹிம்ந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார். அந்த மாநிலத்தில் பசு வதையை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி என்று பசு பாதுகாப்பு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதில், கோயிலை சுற்றி 5 கி.மீ க்கு மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பசு பாதுகாப்பு சட்டம் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி பசுவை கடத்தினால் சொத்துகளை பறிமுதல் […]
இந்தியாவில் அதிக விலை கொடுத்து 1 கிலோ தேயிலையை ஏலம் எடுத்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது. நம் நாட்டில் அசாம் மாநிலத்தில் தான் பிரபலமான மனோகரி தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்தநிலையில், மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட மனோகரி ஹொல்டு ரக தேயிலை நேற்று கௌகாத்தி தேயிலை ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் மனோகரி கோல்டு ரக தேயிலையை 1 […]
கனரக வாகனம் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அசாம்- திரிபுரா எல்லையை ஒட்டியுள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பதர்கண்டி என்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கனரக வாகனமானது எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியுள்ளது. இக்கோர விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பரிதாபமாக […]
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சாரியிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக உரிய நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடிந்தது. ஏர்பஸ் ஏ319 விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையை சேர்ந்தது. இதில் 124 முதல் 156 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்டது . அதனைப்போலவே கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பயணி ஒருவர் மூச்சு திணறல் மற்றும் […]
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ளது. அதற்கான புதிய நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட தலைமைச் செயலாளர், அசாம் மாநிலத்தில் முப்பத்தி ஒரு சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். […]
அசாம் சிறைகளில் உள்ள கைதிகளில் பெண்கள் உட்பட சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அசாம் சிறைகளில் சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியூடுவது என்னவென்றால் அவர்களில் சில பெண் கைதிகளும் அடங்குவர் என்பதாகும். அசாம் மாநிலம் நாகோன் நகரில் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறை உள்ளன. இந்த மத்திய சிறையில் உள்ள 40 கைதிகளும், சிறப்பு சிறையில் 45 கைதிகளும் என மொத்தம் 85 கைதிகளுக்கு […]