செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இடமான பால்மோரல் கோட்டையில் உயிரிழந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாட்கள் கழித்து செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் திங்கள் கிழமை அன்று ஒரு தனியார் சேவைக்கு பின் அவரது கணவர் இளவரசர் பிலிப் அருகில் ராணியின் தந்தை ஆரம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அடக்கம் […]
Tag: அடக்கம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாணவி ஸ்ரீமதி உடலுக்கு நேற்று முன்தினம் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. ஆனால், உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளவில்லை. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், மதியம் 2 மணிக்குள் மாணவி உடலை பெற்றுக்கொண்டு, மாலை இறுதிச்சடங்கு செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
துருக்கியில் இறந்து பிறந்ததாக கருதப்பட்ட குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று, துருக்கியில் வசித்து வரும் Melek Sert (32) என்ற கர்ப்பிணிப்பெண், கடுமையான வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு காரணமாக Adana என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கணவனுடன் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜனவரி 2 ஆம் தேதியன்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன ஒரு பெண் மயிலை பிரிய முடியாமல் பின்தொடர்ந்து செல்கிறது ஒரு ஆண் மயில். இந்த சம்பவம் காண்பவரை கண்கலங்க வைக்கிறது. கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பெண் மயில் திடீரென உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது.
கொரோனா மருத்துவ காப்பீட்டு பாலிசிகள் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டம் மற்றும் பொது சுகாதார நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் அனைத்தும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கு பாலிசி ஒப்பந்தங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பல கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்த முதியவர் தற்போது நோய்வாய்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதை அவருக்கு வழங்கவில்லை. சாவின் பிடியில் இருக்கும் அந்த விருதைத் தனது மார்பில் சுமக்கும் தருணத்தை உணராமல் உயிரிழந்துவிடுவாரோ எனக் குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர். அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி […]
ஜாதி ஆணவத்தால் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் சுடுகாட்டில் செல்வதற்காக கால்வாயில் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் வழியாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பாலத்தின் வழியாக […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பு ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்ல, அதேசமயம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின் அவர்களது உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது புறநோயாளிகள் இரக்கமற்ற முறையில் அடக்கம் செய்யப்படுவது குறித்த வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய […]
மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் […]