உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் சுகாதாரமான குடிநீர் இல்லாததால் மக்களுக்கு காலரா பரவக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில், ரஷ்யா 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் என்னும் துறைமுக நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, அங்கு காலரா நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யப் […]
Tag: அடிப்படை வசதிகள்
ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம் செய்ய உத்தரவிட லாமா என சென்னை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியது அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் கிராம ஊராட்சி வார்டு மறுவரையறை செய்தபோது சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் அவரைகுலம் பஞ்சாயத்தில் சேர்த்துள்ளனர். பழவூர் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்துவரி வாங்கவும் அதற்கான ரசீதுகளை வழங்க […]
ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவடி பேருந்து நிலையத்திற்கு பின்னால் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தர்ஷினி, பிரியா, திவ்யா ஆகிய மூவரும் சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கமாக பேசி இணையதளம் மூலமாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவிகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் அழைத்து […]
அடிப்படை நடவடிக்கைகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள உலையூர் வடக்கு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், மயான வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை முறையாக செய்து தர வலியுறுத்தி அப்பகுதியில் பல்வேறு முறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை கால்வாய் போன்ற வசதிகள் எதுவுமே முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு முறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் […]
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டப்பள்ளி காலனியில் சாலை மற்றும் சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் நடைபெற்று வந்த சாலை பணிகளும் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள 14வது வார்டு கக்கன்ஜி நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவதானபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பெரியகுளம் தாலுகா கட்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கக்கன்ஜி நகரில் சாலை,குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதி, […]
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை போன்றவைகளை செய்து தர வேண்டும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு மாணவர் விடுதியிலும் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் […]
கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி வீர இந்து பேரமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேட்டு பகுதியில் வீர இந்து பேரமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீரப்பாண்டி பகுதியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வந்து செல்வதற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்பகுளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]
குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள மாடகாசம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் நீண்ட காலமாக கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக குடிநீர் உள்ளிட்ட அடிப்பட வசதிகளும் சரியாக செய்யப்படவில்லை. இந்நிலையில் மாடகாசம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் […]
தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]
விருதுநகர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யூனியன் பாவாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அந்த பகுதியில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலரோம் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் […]