சம்பளத்தைக் கேட்ட ஊழியரை பணிப்பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ராகுல் என்பவர் பணியாற்றி வருகிறார். கார் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை கேட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு இவர் கேட்க பெண் ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி […]
Tag: அடி உதை
மராட்டிய மாநிலத்தில் வழி கேட்டு வந்த சாமியாரை தவறாக எண்ணி கிராமவாசிகள் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்கு புறப்பட்டுள்ளனர். மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்த போது வழி தெரியாமல் இருந்த இவர்கள் அந்த பகுதியில் […]
டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவிகள் ஐந்து பேர் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். இதனை படம் பிடித்து சக மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி கூறியதாவது: “மால்கா கஞ்சி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் 13 […]
ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்து, அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை பெண்கள் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, மல்காபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னராவ் என்பவர் தன்னை ஒரு சமூக ஆர்வலர் போல காட்டி, பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்துள்ளார். இதையடுத்து மாணவிகளை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் […]
மாமன் மகன்களுடன் தங்கை பேசிய காரணத்தினால் அவரது சகோதரர்கள் கண்மூடித்தனமாக அந்த பெண்களை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், பிபல்வா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்களது மாமன் மகன்கள் உடன் செல்போன் மூலம் பேசியிருக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் அந்தப் பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி இரண்டு மூன்று ஆண்கள் கட்டையால் சரமாரியாக அடித்து சித்தரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்கள் […]
கால்நடைகளை திருடி செல்வதாகக் கூறிய மூன்று நபர்களை கிராம மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் கொவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் 5 கால்நடைகளை ஏற்றி மூன்று இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதை பார்த்த அந்த கிராம மக்கள் கால்நடைகளை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று பக்கத்து கிராமத்தில் வைத்து அதை மடக்கி பிடித்து வாகனத்தில் இந்த மூன்று […]
நண்பன் வீட்டில் பணம் திருடியதாக கூறி சக நண்பர்களே ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோவை வெளியிட்டதால் அந்த இளைஞன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் ராகுல், அதேபோல் பக்கத்து ஊரான கோனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் இருவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை காணவில்லை என்றும், அதனை ராகுல் […]
பாலியல் தொல்லை கொடுத்தபனியன் நிறுவன அதிகாரியைபெண்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி சூளை பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். 42 வயதாகும் இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். அதே நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த 24 வயது மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இரண்டு பெண்களும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றார்கள். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிவகுமார் பாலியல் தொந்தரவு […]