உதகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]
Tag: அடைப்பு
பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத மாணவி வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை படிப்படியாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தி நாளான இன்று மற்றும் மிலாடி நபி நாளான அக்டோபர் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறினாலோ அல்லது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]
நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறி வருகிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கடலோரப் பகுதிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இன்று மாலை புதுச்சேரி இடையே கடல் […]
கோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நிலையில் முத்தண்ணன் குளத்தில் உபரி நீர் ராஜ வாய்க்கால் வழியாக செல்வ சிந்தாமணி குலத்திற்கு சென்றது. ஆனால் ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் பொண்ணையராஜபுரம் […]
தமிழகம் முழுவதும் நாளை செல்போன் கடைகள் அடைக்கப்படும் என செல்போன் கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் […]
தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருத்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை எதிர்த்து கடையடைப்பு செய்வதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் செல்வன் சேலத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் […]
தமிழகத்தின் பள்ளி கல்வி துறை அலுவலகம் கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ளவதற்கு மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட வேண்டும். என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் சனிக்கிழமை இந்த பணியை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் எனவும் ஆலோசனை அளித்து விட , அதன் பெயரில் தலைமைச் செயலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப் படுத்துவதற்காக இரண்டு நாள்கள் […]