சென்னையில் பேஸ் 1 திட்டத்தின் கீழ் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கீழம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக பேஸ் 2 திட்டத்தில் ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான பேஸ் 2 மெட்ரோ திட்ட […]
Tag: அடையாறு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நேற்று மாலை முதலே கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் […]
சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் அணையில் நீர் திறந்துவிடப்பட்டத்தால் அடையாறு ஆற்றில் நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள திருவிக பாலத்திலன் கீழே அடையாறு ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து கிடந்தது. இதையெடுத்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் […]
உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தலைமை காவலரை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். சென்னை அடையாறு போக்குவரத்து காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் புருசோத்தமன் இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இதுவரை 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். காவல்துறையினருக்கான அகில இந்திய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இவர் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் […]
சென்னையில் நடைபெற்ற பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் – விண்டே ஜ் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின. 1920ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான ரோல்ஸ் ராய்ஸ், ட்ராச்சி பிரதர்ஸ் , ஜாக்குவார், போர்ட், போரிஸ் செவர்லெட் மற்றும் 1886 ஆம் ஆண்டு பென்ஸ் அவர்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம், 1896ஆம் ஆண்டு போர்ட் அவர்களால் […]
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றி அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் மருத்துவமனையில் தலைவராக பணியாற்றியவர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியிலும், இவர் முன்னோடியாக கருதப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மறைவிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.இதில் அவர் […]
செம்பரம்பாக்கம் ஏரி இன்று நண்பகல் அளவில் திறக்கப்படும் உள்ள நிலையில் சென்னை அடையாறு தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. உபரி நீரை அதிகமாக இருந்தால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும். தற்போது செம்பரம்பாக்கத்தில் 22 அடி அளவை எட்டியுள்ளதையடுத்து முதற்கட்டமாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அந்த உபரி நீர் என்பது செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லக்கூடிய கிராமங்களான காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம்மற்றும் […]