தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான திரைப்படம் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR. கதாநாயகனாக ராம்சரண் மற்றும் முதன்மை கதாபாத்திரமாக ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இந்நிலையில் திரையரங்கில் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கியும் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தனர். இதை அறிந்த போலீசார் திரையரங்கிற்கு […]
Tag: அட்டகாசம்
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் தலைநகரில் செய்யும் அட்டகாசத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக உருவான தேசிய கிளர்ச்சி படைகளுடன் தலிபான்கள் அதிபயங்கர மோதலை நடத்தியுள்ளார்கள். மேலும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு தலிபான்களின் வசம் வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனை தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் . […]
சரணாலயத்திலிருந்து பொதுமக்கள் வாழும் இடத்திற்கு நுழைந்து 1 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்படுத்திய காட்டு யானைகளை விரட்டுவதற்காக 150 வாகனங்கள், அவசர சேவை அலுவலர்கள்,400 காவல்துறையினர் டிரோன்களுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். சீனாவின் Xishuangbanna என்னும் இயற்கை சரணாலயத்தில் இருந்து சுமார் 15 காட்டு யானைகள் மக்கள் வாழும் yuxi என்ற நகரத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து சுமார் 6 மணிநேரம் அந்த 15 காட்டு யானைகளும் அந்த பகுதியிலிருக்கும் வீடுகளை நாசம் செய்வது, குப்பைத் தொட்டிகளை உடைப்பது […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]
தாய்லாந்தில் 7- லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு ஒன்று புகுந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் 7 லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ஒரு ராட்சச உடும்பு ஒன்று அங்கிருந்த பொருட்களை அனைத்தும் தன் கனத்த உடம்பை வைத்து தள்ளி விட்டு மேலே ஏறிக்கொண்டிருந்தது. அதன் பிறகு அலமாரியின் மேலே ஏறி படுத்துக் கொண்டது. இதைப் பார்த்த சூப்பர் மார்கெட்டிற்கு வந்த அனைவரும் திகைத்தனர் . அந்த உடும்பின் அட்டகாசம் சமூக வலைதளங்களில் […]
நீலகிரியில் கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து பொருட்களை நாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூர் என்ற பகுதியில் சமீப காலங்களில் கரடிகள் வரத்து அதிகமாகி உள்ளது. மேலும் குன்னூரில் இருக்கும் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கிளண்டேல் என்ற பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதன்பின்பு கடையின் கதவை உடைத்து அங்கிருக்கும் அரிசி, […]
புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய நபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அமெரிக்காவின் மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரான போது அத்துமீறி நுழைந்த ஒருவர் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறியிருக்கிறார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக […]
சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடி நடு ரோட்டில் சென்ற போதை ஆசாமி மாநகர பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு மாயி படத்தில் மதுபோதையில் பேருந்தை வழிமறித்து ரகளை செய்வதுபோல, சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடிய ஒருவர், மாநகர பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே இருக்கின்ற ஜிஎஸ்டி சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் படுத்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு எழுந்து நடுரோட்டில் தள்ளாடிக் கொண்டே […]
வேலூர் பத்திரப்பள்ளியில் ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தி வீடுகளை இடித்து துவசம் செய்யும் அட்டகாசம் செய்வதை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் இவர் தனக்கு சொந்தமான 3.27 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் மற்றும் வாழை பயிரிட்டுள்ளார். இதேபோன்று விவசாயி கர்ணனும் தனக்கு சொந்தமான 3.30 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வைத்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவில் […]
இருசக்கர வாகன திருட்டை தட்டிக் கேட்டதால் மது பிரியர்கள், ஏழு சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளை சைடாமண்ஸ் ரோட்டில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 78 வது வார்டு வட்டச்செயலாளர் இருந்து கொண்டிருக்கிறார். அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியை சேர்ந்த சில நபர்களை செயலாளர் விஜயகுமார், ஏரியாவுக்கு வரக்கூடாது […]
தென்காசி மாவட்டம் புளியரை அருகே கிராமத்தில் மீண்டும் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மேடு என்ற மலையடிவார கிராமத்தில் கடந்த 12-ம் தேதி மாலை கரடி ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி நின்று அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். ஆனால் அந்த கரடி மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கரடியை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிச்செட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மிதித்து நாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதில் ஐயூர் கிராமத்தில் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி பயிர்கள் முற்றிலும் நாசமானது. […]
100 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் சிறுவனின் முட்டை வண்டியை தள்ளி விட்டுவியாபாரத்தை கெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சாலையோரம் தள்ளுவண்டி கடை ஒன்று வைத்து 14 வயது சிறுவன் முட்டை விற்பனை செய்து கொண்டிருக்கிறான். அச்சமயத்தில் அங்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் சிறுவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு மிரட்டி இருக்கின்றனர். அப்போது சிறுவன், இன்னும் வியாபாரம் ஆகாத காரணத்தால் 100 ரூபாய் பணம் என்னிடம் இல்லை என கூறியுள்ளான். அதனைத் […]