செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய […]
Tag: அணு ஆயுதங்கள்
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார். வடகொரியா அரசு போர் அச்சுறுத்தல்களில் தங்களை காக்க தானாகவே அணு ஆயுதங்களை உபயோகிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வடகொரிய அதிபர் தெரிவித்ததாவது, அணுசக்திக்கான நிலையை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அணு சக்தியை பலப்படுத்தப்படும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் அரசு மற்றும் […]
அணுசக்தி தலைவர் ஈரான் நாட்டிற்கு அணுகுண்டை தயாரிக்க கூடிய திறன் இருப்பதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் அரசு தங்களின் அனுசக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதங்களை தயாரிக்க போவதில்லை என்று உறுதிப்படுத்தவும் அதற்கு மாற்றாக அந்நாட்டின் மீது அமல்படுத்தப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்கவும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் 2015 ஆம் வருடத்தில் ஒப்பந்தம் செய்தன. அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. மேலும், […]
உலக நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது இன்னும் 10 வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஸ்வீடனில் இருக்கும் ஸ்டாக்ஹோம் என்னும் அமைதி ஆய்வு நிறுவனமானது பல நாடுகளில் இருக்கும் அணு ஆயுத எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை உலக அரங்கை அதிர செய்திருக்கிறது. 35 வருடங்களாக அணு ஆயுத உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக மீண்டும் அணு ஆயுதங்கள் […]
தென்கொரிய நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற யூன் சுக்-யியோல், வடகொரிய நாடு அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதியான வழியில் செல்லவேண்டும் என்று கேட்டிருக்கிறார். தென் கொரிய நாட்டின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தென்கொரிய நாட்டின் சியோல் நகரத்தில் நடந்த பதவியேற்பு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா கைவிடவேண்டும் என்றார். மேலும், அமைதியான வழியில் சென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ தென்கொரியா […]
தென் கொரியா ராணுவ தாக்குதல் மேற்கொண்டால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். மேலும் அவர் நடத்தும் ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாக இருக்கிறது. எனவே, அந்நாட்டின் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடைகளை […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று கூறிவருகிறார். இந்த போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ அணு ஆயுதம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதாவது ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர், “எங்களுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம். இந்த உலகத்தில் ரஷ்யா […]
சீன அரசு உலகில் இருக்கும் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது. ஆனால் இந்த ஆயுதங்கள் மூலம் போர் நடத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த வல்லரசு நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து, […]
சீனா தனது அணு ஆயுதங்களை வருகின்ற 10 ஆண்டுக்குள் இரு மடங்காகப் பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் இரு மடங்காக பெருக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாக ஏவக்கூடியவை உட்பட பல்வேறு ஆயுதங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை பென்டகன் கூறியுள்ளது. தென்சீனக் கடலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவில் […]