தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை குறைத்தாலும் […]
Tag: அண்ணாமலை பேச்சு
கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியதோடு தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது எதற்காக? என்ஐஏ அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டியது அண்ணாமலையிடம்தான் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது. என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். நாளைய என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன். முதலமைச்சராலும், பழனிவேல் தியாகராஜனாலும் இதை செய்ய முடியுமா?,அவர்களால் செய்ய முடியாது. ஆனால் எனக்கு அந்த துணிவும் தைரியமும் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான் […]
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதை தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி தங்களுடை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் அனைத்து வயதினருக்கும் வாய்ப்பளிக்கப்படும். வயது என்பது முக்கியமல்ல. இளம், மூத்த தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.