அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் 2001–2002 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மாணவர்கள் இந்த மாதம் நடைபெறும் அரியர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தற்போது கடந்த முறை நடந்த இளங்கலை செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் அடுத்து நடைபெற இருக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்து […]
Tag: அண்ணா பல்கலை
அண்ணா பல்கலை.யில் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 25,000 ஊதியத்தில் தமிழ் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ டிச.20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். [email protected] என்ற இணையதள இளநிலை, முதுநிலை தமிழ் பாடத்தில் 55% மதிப்பெண்கள் பெற்றவர்கள் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கடற்கரை மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த புயலானது மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் கொண்டு நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கமும், புயலின் வேகமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டுக்குமான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் 100-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையின் கீழ் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் மீண்டுமாக தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் வருடம் தோறும் TANCET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு MBA, MCA, ME, M.TECH, M.ARCH, M.PLAN போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி டான்செட் தேர்வு பிப்ரவரி மாதம் 25 […]
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 775 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் இருக்கும் 375 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 16 உறுப்பு கல்லூரிகளில் விரைவில் 400 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி மொத்தம் 775 பேராசிரியர் பணியிடங்கள் […]
அண்ணாபல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நவம்பர் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு பல்கலை அறிவித்துள்ள தேதியில் பாடத்திட்டத்தை நடத்த […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். அதில் பிஇ, பி டெக், பி ஆர்க் மற்றும் எம்பிஏ ஆகிய பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த செமஸ்டர் கான கடைசி வேலை […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிஎச்டி மற்றும் எம் எஸ் ஒருங்கிணைந்த எம்.எஸ், பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இறுதியாண்டு தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் […]
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து இரண்டு வாரங்களுக்குள் கல்லூரிகள் விளக்கம் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ஆகியவை வழங்கப்பட மாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. இதற்கு முன்னதாக 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம் 225 […]
தமிழகத்தில் பி.இ., பி.டெக்., ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு துவங்கியது. அதுமட்டுமின்றி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு https://www.tneaonline.org/ எனும் இணையதள முகவரியில் தொடங்க இருக்கிறது. அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமவாய்ப்பு எண் ஜூலை 22 ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பின் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக கல்லூரிகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 8 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படித்த […]
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்று மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகள் ஜூன் 30 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையிலும் அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாகும். ஆகவே மாணவர்கள் வருகைப்பதிவு குறையாமல் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வு ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்ததால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் ஆகிய மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளானது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மார்ச் 7 (இன்று) முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்தநிலையில் அண்ணா பல்கலை மற்றும் அதன் […]
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, கிண்டி வளாகத்தில் பயின்று வரும் மாணவர்களை தொழில்முனைவோா்களாக உருவாக்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தமானது போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோா் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் ஆமதாபாதில் உள்ள தொழில்முனைவோா் மையத்துக்கு இடையே துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் நேற்று கையொப்பமானது. இதன் மூலமாக அதிக மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவா். அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சிகளை சமுதாயத்திற்கு தேவையான முறையில் பயன்படுத்தலாம். […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.. இதேபோல கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக எம்எல்ஏக்களான ஈஸ்வரன், கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. அண்ணாமலை பல்கலை கழக ஆட்சி […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னை அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது, அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன என கூறியுள்ளார். குடிசை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது, முக […]
சென்னை மாநகராட்சியில் இருந்து தொடர்பு கொண்டால் மட்டுமே மாணவர்கள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பல்கலை.க்கு வந்து மீண்டும் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சியே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் ஏற்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் விடுதிகளுக்கு வந்து செல்ல ஒப்புக்கொள்ள வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று […]
மாணவர்கள் உடைமைகளை எடுத்த பின்னர் விடுதிகளை கையகப்படுத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழக விடுதிகளை கொரோனா […]